பிறந்த நாளில் கொலையான இளைஞர்;சப்பாத்தி தகராறில் விபரீதம்

Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
லக்னோ-பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 'ஆர்டர்' செய்த 150 சப்பாத்திகளுக்குப் பதில் 40 சப்பாத்தி களே கொண்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில், ஹோட்டல் உரிமையாளர் தாக்கியதில் பிறந்த நாள் கொண்டாட வேண்டிய இளைஞர் உயிரிழந்தார்.உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷன்னிஹடாவில் வசித்தவர் சன்னி, 30. இவருக்கு நேற்று பிறந்த நாள். இதைக் கொண்டாட வீட்டில் அனைத்து ஏற்பாடுகளையும்

லக்னோ-பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 'ஆர்டர்' செய்த 150 சப்பாத்திகளுக்குப் பதில் 40 சப்பாத்தி களே கொண்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில், ஹோட்டல் உரிமையாளர் தாக்கியதில் பிறந்த நாள் கொண்டாட வேண்டிய இளைஞர் உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷன்னிஹடாவில் வசித்தவர் சன்னி, 30. இவருக்கு நேற்று பிறந்த நாள். இதைக் கொண்டாட வீட்டில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, உறவினர், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இரவு விருந்துக்கு ஹோட்டலில் 150 சப்பாத்திகளுக்கு பணம் செலுத்தியிருந்தார். ஆனால், ஹோட்டலில் இருந்து 40 சப்பாத்திகள் மட்டுமே வந்தன. இதையடுத்து சன்னி மற்றும் உறவினர்கள் சிலர் ஹோட்டலுக்கு சென்று விளக்கம் கேட்ட போது, ஹோட்டல் உரிமையாளர் தன் ஊழியர்களுடன் சேர்ந்து அவர்களை கட்டையால் கடுமையாக தாக்கினார்.

பலத்த காயமடைந்த சன்னி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உறவினர்களும் படுகாயம்அடைந்தனர். அங்கிருந்த சிலர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், சன்னி உயிரிழந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹோட்டல் ஊழியர்களை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உ.பி., மாநிலம் முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X