திருமலைக்கு மது பாட்டில்எடுத்து வந்த இளைஞர் கைது

Added : ஜூன் 27, 2022 | |
Advertisement
திருப்பதி,--திருமலைக்கு மது பாட்டில்கள் எடுத்து செல்ல முயன்ற கட்டட தொழிலாளி ஒருவரை, அலிபிரியில் போலீசார் கைது செய்தனர்.திருமலையில் மது, மாமிசம், குட்கா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அலிபிரியில் உள்ள சோதனை சாவடியில் திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், பக்தர்களும், அவர்களின் உடமைகளும், முழு சோதனைக்கு

திருப்பதி,--திருமலைக்கு மது பாட்டில்கள் எடுத்து செல்ல முயன்ற கட்டட தொழிலாளி ஒருவரை, அலிபிரியில் போலீசார் கைது செய்தனர்



.திருமலையில் மது, மாமிசம், குட்கா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அலிபிரியில் உள்ள சோதனை சாவடியில் திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், பக்தர்களும், அவர்களின் உடமைகளும், முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.இந்நிலையில், நேற்று காலை திருமலைக்கு செல்ல முயன்ற, பெங்களூரை சேர்ந்த கட்டட தொழிலாளி வெங்கடேசனின் பையை போலீசார் பரிசோதனை செய்தனர். அதில் 20க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமலையில் கட்டட பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X