மாணவியருக்கு மாதம் ரூ.1,000 விண்ணப்பிக்க அரசு அழைப்பு

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை-'அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, மேற்படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது. அரசு செய்திக் குறிப்பு:சமூக நலத் துறை சார்பில், ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'அரசு பள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, மேற்படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.latest tamil newsஅரசு செய்திக் குறிப்பு:சமூக நலத் துறை சார்பில், ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயம், பட்டப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில், இடைநிற்றல் இல்லாமல் படித்து முடிக்கும் வரை, மாதம், 1,000 ரூபாய், அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.இந்த மாணவியர் ஏற்கனவே, பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.


தகுதிகள்

 மாணவியர், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, தமிழக அரசு பள்ளிகளில் படித்து, தமிழகத்தில் உயர் கல்வி படிப்பவராக இருக்க வேண்டும்

 தனியார் பள்ளியில், கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படித்த பின், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்த மாணவியரும் பயனடையலாம்

 எட்டு அல்லது 10 அல்லது பிளஸ் 2 வகுப்புகளில் படித்து, முதன்முறையாக உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே, இத்திட்டம் பொருந்தும் தொலைதுாரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலையில் படிக்கும் மாணவியருக்கு, இந்த திட்டம் பொருந்தாது

 நடப்பு கல்வியாண்டில் புதிதாக மேற்படிப்பில், முதலாம் ஆண்டு சேர்ந்த பின், இணையதளம் வழியாக இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இதர முதலாம் ஆண்டில் இருந்து, இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டில் இருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவியரும் பயன்பெறலாம்


latest tamil news


 தொழிற்கல்வியை பொறுத்தவரை, மூன்றாம் ஆண்டில் இருந்து நான்காம் ஆண்டுக்கு செல்லும் மாணவியர், மருத்துவக் கல்வியை பொறுத்தவரை, நான்காம் ஆண்டில் இருந்து, ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர் பயன் பெறலாம்  கடந்த 2021 - 2022ம் ஆண்டில் இறுதியாண்டு படிக்கும் மாணவியர், இந்த திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில், ஒரு சில மாதங்களில் அவர்கள் தங்கள் இளநிலை படிப்பை நிறைவு செய்து விடுவர்

 இந்த திட்டத்தில், இளநிலை படிப்பு படிக்கும் மாணவியர் மட்டுமே பயனடைய இயலும். கூடுதல் விபரங்கள் பெற, '14417' என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் இளங்கலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும், இத்திட்டத்திற்காக புதிதாக உருவாக்கப்பட்ட, penkalvi.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக, தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202212:10:59 IST Report Abuse
ஆரூர் ரங் மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் கிடையாது . BC SC ஸ்காலர்ஷிப் உண்டு. இலவச பஸ், புத்தகங்கள் இலவசம். அப்புறம் 1000 எதற்கு🤔? டாஸ்மாக் ஜெயன்ட் மூலம் திருப்பி😉 எடுக்கலாம்ன்னு நெனப்பு?
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
28-ஜூன்-202210:37:59 IST Report Abuse
raja தாலிக்கு தங்கம் அம்மாவால் ஆரமிக்க பட்ட இந்த திட்டம் இந்து பெண்கள் மட்டுமே பயன் பெட்ராஒரு சிறப்பு திட்டம்... அந்த திடத்தை நிறுத்தி கிருத்துவர்களும் முஸ்லிம்களும் இப்போது அனுபவிக்கலாம் என்ற இந்த இந்து விரோத கேடுகெட்ட திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்டத்தை விரட்டி அடிக்க இந்துக்கள் சாதி கடந்தது ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம்... அதனால் தான் இப்பொழுத்து திரு அண்ணாமலையின் தலைமையின் கீழ் இந்துக்கள் சாதி கடந்து அலைகடலென திரள்கிறார்கள்......
Rate this:
Cancel
28-ஜூன்-202209:00:48 IST Report Abuse
ஆரூர் ரங் திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் போன்ற பல திட்டங்களை நிறுத்தி விட்டு, வேண்டாத சோப்பு டப்பா🙃 பரிசு போல ஆயிரம் கொடுக்கும் அரசு. எல்லோரையும் BA BSc, பட்டதாரிகளாக்கியபின் எந்த வேலைவாய்ப்பு தருவார்கள்? எவனாவது சரக்கு மிடுக்கு நாடகத் திருமணம் கையில் மாட்டாமல் இருந்தால் சரி.
Rate this:
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
28-ஜூன்-202210:15:32 IST Report Abuse
Sidhaarthஅக்னிபத் வீரர்களுக்கே வேலை கிடைக்கும் எனும்போது இந்த தங்கங்களுக்கு கிடைக்காதா? என்ன ஒரு வயித்தரிச்சல்...
Rate this:
raja - Cotonou,பெனின்
28-ஜூன்-202210:44:13 IST Report Abuse
rajaகண்டிப்பா கிடைக்கு கொள்ளை கூட்ட கொத்தடிமையே... பொறியியல் படித்தவன் மாட்டு சாணி அள்ளும் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது இவர்களுக்கு அரசு அலுவலகங்களில் கூட்டி பேருக்கு வேலை கூட கிடைக்காதா என்ன..... கேடுகெட்ட விடியல் இந்த திருட்டு திராவிட ஓங்கோல் கொள்ளை கூட்டத்தால் தமிழகத்துக்கு....விரட்டி அடிக்க தமிழர்கள் தயாராய் தக்க சமயம் பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X