முர்முவை சந்திப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை--பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து, ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், அவரை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஜூலை 18-ம் தேதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஆளும் பா.ஜ., சார்பில் திரவுபதி முர்மு; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து, ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், அவரை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.



latest tamil news


ஜூலை 18-ம் தேதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஆளும் பா.ஜ., சார்பில் திரவுபதி முர்மு; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில், யஷ்வந்த் சின்ஹா இடையே நேரடி போட்டி உறுதியாகி உள்ளது.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என, பா.ஜ., கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதால், முர்முவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஜூலை 1- முதல், நாடு முழுதும் பயணம் செய்து பிரசாரம் செய்ய முர்மு திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையிலான 14 பேர் குழு செய்து வருகிறது.அப்போது, எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட, முர்மு திட்டமிட்டுள்ளார். ஜூலை முதல் வாரத்தில், சென்னை வர திட்டமிட்டுள்ள முர்மு, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து ஆதரவுஅளிக்குமாறு கேட்க உள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.


latest tamil news



பா.ஜ., எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் தி.மு.க., தலைமை, யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின், முர்முவை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
28-ஜூன்-202214:42:34 IST Report Abuse
Vena Suna கோழி கொழம்பு கிடைக்கும் என்றால் சாப்பிடுவார்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
28-ஜூன்-202213:32:48 IST Report Abuse
கல்யாணராமன் சு. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்கிற முறையில், ஒரு வருங்கால குடியரசுத் தலைவரை (அல்லது போட்டியாளரை) மரியாதை நிமித்தம் சந்திப்பது பண்பாடு... அதை முதலமைச்சர் பின்பற்றுவார் என நம்புகிறேன்... அல்லக்கைகள் (எனப்படும் மந்திரிகள்) பேச்சை கேட்டு புறக்கணித்தால், நாளை அவரை குடியரசுத் தலைவராக சந்திக்கும்போது ஒரு இக்கட்டான நிலை உருவாகக் கூடும் ..........
Rate this:
Cancel
Tiruchendurai Balasubramanian - Chennai,இந்தியா
28-ஜூன்-202213:19:24 IST Report Abuse
Tiruchendurai Balasubramanian தமிழக முதல்வர், ஜனாதிபதி வேட்பாளரை சந்திக்க மறுத்தால், நஷ்டம் ஸ்டாலின் அவர்களுக்குத்தான். ஜானதிபதி வேட்பாளருக்கு ஒன்றுமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X