முர்முவை சந்திப்பாரா முதல்வர் ஸ்டாலின்?| Dinamalar

முர்முவை சந்திப்பாரா முதல்வர் ஸ்டாலின்?

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (27) | |
சென்னை--பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து, ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், அவரை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஜூலை 18-ம் தேதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஆளும் பா.ஜ., சார்பில் திரவுபதி முர்மு; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை--பா.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து, ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ள நிலையில், அவரை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது.



latest tamil news


ஜூலை 18-ம் தேதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஆளும் பா.ஜ., சார்பில் திரவுபதி முர்மு; காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில், யஷ்வந்த் சின்ஹா இடையே நேரடி போட்டி உறுதியாகி உள்ளது.ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆதரவில் ஆட்சியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா என, பா.ஜ., கூட்டணியில் இல்லாத கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளதால், முர்முவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஜூலை 1- முதல், நாடு முழுதும் பயணம் செய்து பிரசாரம் செய்ய முர்மு திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளை, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையிலான 14 பேர் குழு செய்து வருகிறது.அப்போது, எதிர்க்கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட, முர்மு திட்டமிட்டுள்ளார். ஜூலை முதல் வாரத்தில், சென்னை வர திட்டமிட்டுள்ள முர்மு, தி.மு.க., தலைவரும், முதல்வருமான ஸ்டாலினை சந்தித்து ஆதரவுஅளிக்குமாறு கேட்க உள்ளதாக, பா.ஜ.,வினர் தெரிவிக்கின்றனர்.


latest tamil news



பா.ஜ., எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் தி.மு.க., தலைமை, யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்து விட்ட நிலையில், முதல்வர் ஸ்டாலின், முர்முவை சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X