ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் நிலை குழப்பம்!

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, தன் வேட்புமனுவை, 14 கட்சிகளின் தலைவர்கள் புடைசூழ தாக்கல் செய்தார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் அணியில் முக்கியமாக கருதப்படும் ஆம் ஆத்மி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் பிரதிநிதிகள் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இதனால் ஜனாதிபதி

ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா, தன் வேட்புமனுவை, 14 கட்சிகளின் தலைவர்கள் புடைசூழ தாக்கல் செய்தார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் அணியில் முக்கியமாக கருதப்படும் ஆம் ஆத்மி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் பிரதிநிதிகள் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.latest tamil news


இதனால் ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டில் குழப்பம் நீடிக்கிறது.அடுத்த மாதம் 18ல், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில், ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். இவர், தன் வேட்புமனுவை 23ல் தாக்கல் செய்தார்.திரவுபதியின் வேட்பு மனுவை, பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வழிமொழிய, பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் தலைவர்களின் புடை சூழ தாக்கல் செய்யப்பட்டது.பங்கேற்க வரவில்லை

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தன் வேட்பு மனுவை தாக்கல் செய்ய, பார்லிமென்ட்டிற்கு நேற்று வந்திருந்தார்.அவர் வருவதற்கு முன்னதாக, பார்லிமென்ட்டில் உள்ள காங்., கட்சி அலுவலகத்தில், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார், காங்., மூத்த எம்.பி., ராகுல், உள்ளிட்ட பல எதிர்க்கட்சித் தலைவர்கள் காத்திருந்தனர்.

சற்று தாமதமாக வந்து சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா, அங்கிருந்த தலைவர்களுடன் ஆலோசனை செய்தபின், ராஜ்ய சபா செயலகத்தில் செக்ரட்ரி ஜெனரல், பி.சி.மோடியிடம், தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், திரிணமுல் காங்., - எம்.பி., அபிஷேக் பானர்ஜி மற்றும் சவுகதா ராய், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, லோக்தள் தலைவர் ஜெயந்த் சவுத்ரி, இடதுசாரி தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, ராஜா ஆகியோர் வந்திருந்தனர்.ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், அக்கட்சியின் தலைவர் லாலுவின் மகள் மிசா பார்தி, புரட்சிகர சோசலிஸ்ட் தலைவர் பிரேமச்சந்திரன், முஸ்லிம் லீக் தலைவர் முகமது பசீர் ஆகியோரும் உடன் இருந்தனர்.எதிர்க்கட்சிகள் பொதுவேட்பாளரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியபோது, காங்., இடம்பெற்றுள்ள அணியில் அங்கம் வகிக்க முடியாதென காரணம் கூறி, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி பின்வாங்கியது.

ஆனால், நேற்றைய வேட்பு மனு தாக்கலின்போது, கடைசி நிமிட விருந்தாளியாக, அக்கட்சியின் மாநில அமைச்சரும், மூத்த தலைவருமான கே.டி.ராமாராவ், கலந்து கொண்டார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் அணியில் முக்கியமாக கருதப்படும் ஆம் ஆத்மி மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகளின் பிரதிநிதிகள், வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க வரவில்லை.மேலும், மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் முக்கிய தலைவர்களும் இதில் பங்கேற்கவில்லை.பின்னடைவு

ஏற்கனவே, பிஜு ஜனதா தளமும், பகுஜன் சமாஜ் கட்சியும் பா.ஜ., வேட்பாளரை ஆதரித்துள்ள நிலையில், தங்களுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு முக்கிய கட்சிகளின் ஆதரவு உறுதியாகவில்லை என்பதால், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் பின்னடைவு ஏற்பட்டுஉள்ளது. வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன், அனைத்து தலைவர்களும் பார்லி., வளாகத்தில் அமைந்துள்ள காந்தி மற்றும் அம்பேத்கர் சிலைகளுக்கு, மலர் துாவி மரியாதை செய்தனர்.நடப்பது இருவேறு சித்தாந்தங்களுக்கு இடையிலான போர். இதில், ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக ஓரணியில் நிற்போம்.
காங்., - எம்.பி., ராகுல்.வேட்பாளர் தேடல் ஏன்?
வேட்புமனு தாக்கலுக்குப் பின் யஷ்வந்த் சின்ஹா கூறியதாவது:அரசியலமைப்பு சட்டத்தின் மிக உயர்ந்த ஜனாதிபதி பதவிக்கு, ஒருமித்த கருத்தின் அடிப்படையில், தேர்வு இருந்திருக்க வேண்டும். அதைச் செய்ய அரசு தவறிவிட்டது. சம்பிரதாயத்திற்காக, சில தலைவர்களுக்கு போனில் அழைப்பு வந்தது, அவ்வளவு தான். இதனால் எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளரை தேட வேண்டி வந்தது. ஆளும் கட்சி, தங்களது வேட்பாளர் யார் என்பதை முன்னரே முடிவு செய்து வைத்திருந்தும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யார் என்று தெரிந்த பின் தங்கள் வேட்பாளரை அறிவித்தது தவறு.இவ்வாறு அவர் கூறினார்.latest tamil news
தமிழக தலைவர்கள்

டில்லி நிகழ்ச்சிகளில் தி.மு.க.,வின் முகமாக கலந்து கொள்ளும் டி.ஆர்.பாலு, இதில் பங்கேற்கவில்லை. மாறாக, மூத்த எம்.பி.,க்கள் ராஜா, இளங்கோவன், சிவா, கலாநிதி வீராச்சாமி, தமிழக சட்டசபைக் கொறடா கோ.வி.செழியன் எம்.எல்.ஏ., ஆகியோர் தி.மு.க., சார்பில் வந்திருந்தனர். வி.சி.க., தலைவர் திருமாவளவன் எம்.பி., வந்திருந்தார். ஆரணியின் காங்., - எம்.பி., விஷ்ணு பிரசாத்தும் உடன் இருந்தார்.சந்திக்க மறுத்த அத்வானி?

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன், நேற்று காலை, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியை சந்திக்க, யஷ்வந்த் சின்ஹா திட்டமிட்டிருந்தார். ஆனால், அத்வானியின் வீட்டில் இருந்த ஊழியர்கள், 'அத்வானியின் மகள் பிரதிபாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதால், யாரையும் வீட்டிற்குள் அனுமதிப்பது இல்லை' என கூறி விட்டனர். இதனால் யஷ்வந்த் சின்ஹா ஏமாற்றம் அடைந்தார். ஆனாலும், பா.ஜ.,வில் உள்ள தன் பழைய நண்பர்களை சந்தித்து ஆதரவு கோரப் போவதாக யஷ்வந்த் சின்ஹா, நிருபர்களிடம் கூறினார்.- நமது டில்லி நிருபர்-

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
28-ஜூன்-202213:22:44 IST Report Abuse
M S RAGHUNATHAN 85 வயதிலும் பதவி ஆசை. இவர்களுக்கெல்லாம் மரணம் வரை பதவியில் இருக்க ஆசை. எனக்கு தெரிந்து எந்த பதவியும் வேண்டாம் என்று சென்றவர்கள் இருவர். அவர்கள் திரு ஜயப் பிரகாஷ் நாராயண் மற்றும் நானாஜி தேஷ்முக். உயர்ந்த பதவிகள் வந்தபோதும், மக்கள் தொண்டு போதும் என்று அவற்றை சேர்க்க மறுத்த மகான்கள்.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
28-ஜூன்-202211:08:30 IST Report Abuse
raja ஐயோ பாவம் ...ஒரு பலி ஆட்டை கொண்டு வந்து நிப்பாட்டினானுவோ இந்த எதிர் கோஷ்டிகள்.....
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-ஜூன்-202212:46:29 IST Report Abuse
Dhurveshபிராமணர்களை எதிர்க்கவில்லை பிராமியத்தை ஆரிய சித்தாதந்தத்தை எதிரிக்கிறது தட்ஸால் யுவர் ஆனார்...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-ஜூன்-202215:18:31 IST Report Abuse
Kasimani Baskaran"பிராமியத்தை" - இஸ்ரோவுக்கும் இஸ்ரேலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவில் இருக்கும் உள்ளடுக்கில் இருக்க வேண்டிய ஆள்... தவறுதலாக வெளியடுக்கு வந்து உயிரை வாங்கவேண்டாம்......
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
28-ஜூன்-202211:00:12 IST Report Abuse
Sampath Kumar இந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவிக்கு இதனை பீல்டுக்குப் தேவை இல்லை இதுக்கு ஒரு தேர்தல் வேறு பேசாமல் பிரிடிஷ் ஸ்டைலை ஒளித்து விட்டு அமெரிக்கா ஸ்டைலில் மாற்றினால் நல்ல இருக்குமா ?
Rate this:
Soumya - Trichy,இந்தியா
28-ஜூன்-202212:40:12 IST Report Abuse
Soumyaவிடியலின் நீட் தேர்வை நீக்குவதற்கும் அந்த ரப்பர் ஸ்டாம்ப் தேவை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X