இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: தாய், 6 வயது மகள் ஓடும் காரில் பலாத்காரம்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள்தாய், 6வயது மகள் ஓடும் காரில் பலாத்காரம் ரூர்கி-காரில் 'லிப்ட்' கேட்டு ஏறிய பெண்ணையும், அவரது 6 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உத்தரகண்ட் போலீசார் தேடி வருகின்றனர்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹரித்துவார் அருகே ரூர்கி நகரில் உள்ள தர்கா ஒன்றுக்கு 6 வயது மகளுடன் ஒரு


இந்திய நிகழ்வுகள்


தாய், 6வயது மகள் ஓடும் காரில் பலாத்காரம்


ரூர்கி-காரில் 'லிப்ட்' கேட்டு ஏறிய பெண்ணையும், அவரது 6 வயது மகளையும் பாலியல் பலாத்காரம் செய்தவர்களை உத்தரகண்ட் போலீசார் தேடி வருகின்றனர்.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஹரித்துவார் அருகே ரூர்கி நகரில் உள்ள தர்கா ஒன்றுக்கு 6 வயது மகளுடன் ஒரு பெண் வந்தார். அங்கு, பிரார்த்தனை முடிந்து வீடு திரும்ப பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரில் 'லிப்ட்' கேட்டு ஏறினார்.காருக்குள் சில ஆண்கள் இருந்தனர். அவர்கள் செல்லும் வழியில், அந்தப் பெண்ணையும், 6 வயது சிறுமியையும் பலாத்காரம் செய்து, நடுவழியில் ஒரு கால்வாயில் தள்ளி விட்டுச் சென்றனர்.அங்கிருந்து எழுந்து வந்த அந்தப் பெண், போலீஸ் ஸ்டேஷனுக்கு நள்ளிரவில் வந்து புகார் செய்தார்.

இதையடுத்து, இருவரையும் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கார் ஓட்டி வந்தவர் பெயர் சோனு என்பது மட்டும் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.


திருமலைக்கு மது பாட்டில் எடுத்து வந்த இளைஞர் கைதுதிருப்பதி--திருமலைக்கு மது பாட்டில்கள் எடுத்து செல்ல முயன்ற கட்டட தொழிலாளி ஒருவரை, அலிபிரியில் போலீசார் கைது செய்தனர்.திருமலையில் மது, மாமிசம், குட்கா, பீடி, சிகரெட் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அலிபிரியில் உள்ள சோதனை சாவடியில் திருமலைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும், பக்தர்களும், அவர்களின் உடமைகளும், முழு சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.இந்நிலையில், நேற்று காலை திருமலைக்கு செல்ல முயன்ற, பெங்களூரை சேர்ந்த கட்டட தொழிலாளி வெங்கடேசனின் பையை போலீசார் பரிசோதனை செய்தனர். அதில் 20க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.விசாரணையில் அவர் ஆறு மாதங்களுக்கு முன்பு திருமலையில் கட்டட பணியில் ஈடுபட்டது தெரிய வந்தது.


பிறந்த நாளில் கொலையான இளைஞர்; சப்பாத்தி தகராறில் விபரீதம்லக்னோ-பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக 'ஆர்டர்' செய்த 150 சப்பாத்திகளுக்குப் பதில் 40 சப்பாத்தி களே கொண்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில், ஹோட்டல் உரிமையாளர் தாக்கியதில் பிறந்த நாள் கொண்டாட வேண்டிய இளைஞர் உயிரிழந்தார்.உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் உள்ள ஷன்னிஹடாவில் வசித்தவர் சன்னி, 30. இவருக்கு நேற்று பிறந்த நாள். இதைக் கொண்டாட வீட்டில் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து, உறவினர், நண்பர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இரவு விருந்துக்கு ஹோட்டலில் 150 சப்பாத்திகளுக்கு பணம் செலுத்தியிருந்தார். ஆனால், ஹோட்டலில் இருந்து 40 சப்பாத்திகள் மட்டுமே வந்தன. இதையடுத்து சன்னி மற்றும் உறவினர்கள் சிலர் ஹோட்டலுக்கு சென்று விளக்கம் கேட்ட போது, ஹோட்டல் உரிமையாளர் தன் ஊழியர்களுடன் சேர்ந்து

அவர்களை கட்டையால் கடுமையாக தாக்கினார். பலத்த காயமடைந்த சன்னி ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உறவினர்களும் படுகாயம்அடைந்தனர். அங்கிருந்த சிலர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். ஆனால், சன்னி உயிரிழந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹோட்டல் ஊழியர்களை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உ.பி., மாநிலம் முழுதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news
நடிகை பலாத்கார வழக்கு பிரபல தயாரிப்பாளர் கைதுகொச்சி-நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் முன் ஜாமின் பெற்றிருந்த மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு நேற்று கைது செய்யப்பட்டார்.மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு புதிய படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டார். அதில் நடிக்க புதுமுக நடிகை ஒருவரை ஒப்பந்தம் செய்திருந்தார்.இந்நிலையில், அந்த நடிகை கடந்த ஏப்ரலில் சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தயாரிப்பாளர் விஜய் பாபு தன்னை உடல் ரீதியாக துன்புறுத்தி வந்ததாகவும், பல முறை பலாத்காரம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், இதுபற்றி போலீசிலும் புகார் செய்தார். இதுகுறித்து கொச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில், கேரள உயர் நீதிமன்றம், 22ம் தேதி விஜய் பாபுவுக்கு முன் ஜாமின் அளித்தது. இதற்கிடையே, கொச்சி போலீசார் விஜய்பாபுவை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'நடிகையை பலாத்காரம் செய்த வழக்கில் விஜய் பாபுவை கைது செய்துள்ளோம். 'உயர் நீதிமன்ற நிபந்தனைப்படி, இரு நபர்கள் தலா 5 லட்சம் ரூபாய் ஜாமின் தொகை செலுத்தினால், அவர் ஜாமினில் விடுவிக்கப்படுவார். இருப்பினும், வழக்கு விசாரணைக்காக வரும் 3ம் தேதி வரை அவர் போலீஸ் காவலில் இருப்பார்' என்றனர்.


போலீஸ் மீது தாக்குதல் நடத்தி சதி செய்த பயங்கரவாதி கைதுஜம்மு-ஜம்மு - காஷ்மீரில், போலீசார் மீது தாக்குதல் நடத்த ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டார்.அமர்நாத் புனித யாத்திரையை முன்னிட்டு ஜம்மு பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜம்முவின் தோடா என்ற இடத்தில் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று அங்கு சோதனை நடந்து கொண்டிருந்த போது, ஒருவரிடம் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, வெடி மருந்துகள், துப்பாக்கிக் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்து, ஆயுதங்கள் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இவர், தோடா அருகிலுள்ள கோட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பரீத் அகமது என்பதும், பாக்.,கில் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.பாக்.,கில் இயங்கும் ஒரு பயங்கரவாத அமைப்பு, ஜம்முவில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் மீது தாக்குதல் நடத்த தன்னை அனுப்பி வைத்துள்ளதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ஊடுருவ முயன்றவர் பலிநம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஒருவர் ஊடுருவ முயன்றார். எல்லைப் பாதுகாப்பு படையினர் அவரை எச்சரித்தனர். இதை மீறி அவர் நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்றார். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அவரை சுட்டுக்கொன்றனர். அவரது உடல் ஜம்மு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து, ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை வழியாக ஒருவர் ஊடுருவ முயன்றார். எல்லைப் பாதுகாப்பு படையினர் அவரை எச்சரித்தனர். இதை மீறி அவர் நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்றார். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் அவரை சுட்டுக்கொன்றனர். அவரது உடல் ஜம்மு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


தமிழக நிகழ்வுகள்
மகளுக்கு தொல்லை; தந்தைக்கு போக்சோகுள்ளஞ்சாவடி : மகளுக்கு பாலியல் தொல்லை தந்த காமுக தந்தை, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 37 வயது கூலித் தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

மகளுக்கு இரண்டு ஆண்டாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். தட்டி கேட்ட மனைவியை மிரட்டி, மனைவியின் கண் எதிரில் மகளை பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.கணவரின் கொடுமை குறித்து, போலீசில் புகார் அளித்தார்.போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, காமுக தந்தையை கைது செய்தனர்.


நாகர்கோவிலில் 83 பவுன் நகை கொள்ளைநாகர்கோவில்,-நாகர்கோவிலில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டின் கதவை உடைத்து 83 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.நாகர்கோவில் வடலிவிளை தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆண்டேஸ்வரன் 50. திருநெல்வேலியில் தனியார் நிறுவன மேலாளராக உள்ளார். சென்னையில் படித்து வரும் மகனை பார்க்க குடும்பத்தினருடன் சென்றிருந்தார். வீட்டில் உள்ள நாய்க்கு உணவு கொடுக்க பக்கத்து வீட்டு பெண் சென்ற போது நாய் வீட்டுக்குள் நின்றுள்ளது. வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.கோட்டார் போலீசார் ஆய்வு செய்த போது பீரோக்கள் உடைக்கப்பட்டு 83 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. வீட்டில் இருந்து ரேகைகள் பதிவு கிடைத்துள்ளது. உள்ளூர் திருடர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.


சுடுகாட்டில் பெண் புதைக்கப்பட்ட வழக்கு; தந்தை மகன் கைது


மூங்கில்துறைப்பட்டு : மூங்கில்துறைப்பட்டு அருகே, கொலை செய்யப்பட்ட பெண் உடல் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட வழக்கில் தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். மேலும், ஒருவரை தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த பாக்கம் புதுார் சுடுகாட்டில் கடந்த 19ம் தேதி மர்மமான முறையில் பள்ளம் தோண்டி மூடப்பட்டிருந்தது.

இதனால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தெரிவித்தனர்.கடந்த 24ம் தேதி, தாசில்தார் பாண்டியன் முன்னிலையில் போலீசார் தோண்டிப் பார்த்தனர். அதில் சாக்கு மூட்டையில் பெண் உடல் இருந்தது தெரிய வந்தது.வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும் தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.அதில், கொலை செய்யப்பட்டது விரியூரைச் சேர்ந்த மூர்த்தி மனைவி ஆண்டாள், 60; என்பதும், இவரது கணவர் இறந்ததால் மகள் தனலட்சுமியுடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.மேலும், சுடுகாட்டு பகுதியில் மொபைல் போனில் பேசிய சிக்னலை வைத்து சந்தேகத்தின் பேரில், விரியூரைச் சேர்ந்த வீராசாமி, 55; அவரது மகன் விக்னேஷ், 28; ஆகிய இருவரையும் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.அதில் தெரிய வந்ததாவது:

ஆண்டாள் மகள் தனலட்சுமி, 40; அப்பகுதியில் அரிசி கடை வைத்து நடத்தி வருகிறார். தான் அரிசி கடை வைக்க இருப்பதால் தனக்கு மொத்தமாக அரிசி வேண்டும் என வீராசாமி சிறுகச் சிறுக 15 லட்சம் ரூபாய் வரை தனலட்சுமிடம் கொடுத்துள்ளார்.ஆனால், தனலட்சுமி அரிசி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பணத்தையும் திருப்பித் தரவில்லை.கடந்த 7ம் தேதி வீராசாமி, மகன் விக்னேஷ் இருவரும் பணம் கேட்க தனலட்சுமி வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது, தனலட்சுமி தலைமறைவான விஷயம் தெரியவந்தது.இதனால், ஆத்திரமடைந்த இருவரும், வீட்டில் இருந்த தனலட்சுமியின் தாய் ஆண்டாளை தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று, கடந்த 18ம் தேதி வரை யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்திருந்தனர்.ஆனாலும், தனலட்சுமி இருக்கும் இடம் தெரியவில்லை. பணமும் வராது என தெரியவந்தது. மேலும், இதற்கு பிறகு ஆண்டாளை வெளியே விட்டால், அவரை அடைத்து வைத்த விஷயம் வெளியே தெரிந்து விடும் எனக்கருதி, வீராசாமியும், விக்னேஷும் சேர்ந்து, 18ம் தேதி மதியம் ஆண்டாள் கழுத்தை முறித்து கொலை செய்துள்ளனர்.

பின் ஆண்டாள் உடலை என்ன செய்வது என தெரியாமல் தவித்த விக்னேஷ், திருவண்ணாமலை மாவட்டம், அல்லப்பனுாரைச் சேர்ந்த நண்பரிடம் நடந்த சம்பவத்தைக் கூறியுள்ளனர்.அவர், கூறிய ஆலோசனைப்படி அன்று இரவே வீராசாமி, விக்னேஷ், மற்றும் அவரது நண்பர் என மூவரும் சேர்ந்து, ஆண்டாள் உடலை புதுார் சுடுகாட்டில் புதைத்துள்ளனர். முகம் சிதைந்து அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக சாக்குப் பையில் யூரியா போட்டு புதைத்ததாகவும் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.உடன் போலீசார் வீராசாமி, விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து, விக்னேஷ் நண்பரை தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட விக்னேஷ் மெக்கானிக்கல் இன்ஜினியர் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


விபத்தில் போலீஸ்காரர் மகனுடன் பலிதுாத்துக்குடி-துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வெங்கடேஸ்வராபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாமார்ஷல், 38. காடல்குடி ஸ்டேஷனில் போலீசாக உள்ளார். இவரது மனைவி தேவிகா. ரிஷ்வந்த், 6; ரிஷாந்த், 4; ரெனிஷா என, மூன்று குழந்தைகள் இருந்தனர்.நேற்று முன்தினம் மாலை, பைக்கில் கோவில்பட்டி- - எட்டயபுரம் ரோட்டில் மனைவி, குழந்தைகளுடன் சென்றார். சிப்காட் அருகே பின்னால் வந்த கார் பைக் மீது மோதியதில் நால்வரும் காயமடைந்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ரிஷாந்த் இறந்தார்.மதுரை அரசு மருத்துவமனையில் ராஜா மார்ஷல் இறந்தார். மற்ற இருவரும் சிகிச்சையில் உள்ளனர். கார் டிரைவர் விளாத்திகுளம் சிவராமச்சந்திரனை, கோவில்பட்டி கிழக்கு போலீசார் கைது செய்தனர்.


மலைப்பாதையில் விபத்து: புதுப்பெண் தந்தை பலிஏற்காடு-ஏற்காடு மலைப்பாதை யில், கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், புதுப்பெண், தந்தை பலியாகினர்.சேலம், கன்னங்குறிச்சியைச் சேர்ந்தவர் கோகுல்நாத், 30. இவருக்கும், அரியலுார் மாவட்டம், உடையார்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோவன் மகள் லோகேஸ்வரி, 24, என்பவருக்கும் கடந்த, 3ம் தேதி திருமணமானது.நேற்று, அரியலுாரிலிருந்து தன் மகளை பார்க்க இளங்கோவன், சேலம் வந்துள்ளார். பின், லோகேஸ்வரியும், இளங்கோவனும், 'புல்லட்' பைக்கில் ஏற்காடு சென்றனர்.அங்கு சுற்றி பார்த்துவிட்டு, மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, 5வது கொண்டை ஊசி வளைவில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தடுப்புச் சுவரை இடித்து, 40 அடி பள்ளத்தில் உருண்டது. இதில், லோகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த இளங்கோவனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் அங்கு உயிரிழந்தார். ஏற்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


வாலிபர் கொலை: 3 பேர் கைதுவந்தவாசி,-முன்விரோதத்தில் வாலிபரை எரித்துக் கொன்ற மூவரை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த நல்லுாரைச் சேர்ந்தவர் விஜய், 22; மளிகை வியாபாரி; கடந்த, 12ல் இரவு வியாபாரம் முடிந்து, கடையை பூட்டிச்சென்றவர் வீடு திரும்பவில்லை.அவரை தெள்ளார் போலீசார் தேடி வந்தனர். நேற்று முன்தினம், நாவல்பாக்கத்தில் எரிந்த நிலையில் அவரின் சடலம் கிடப்பதை கண்டனர்.அவரை மொபைல்போனில் தொடர்பு கொண்டவர்களின் விபரம் குறித்து போலீசார் விசாரித்தனர். அதன்படி, ராமசமுத்திரத்தைச் சேர்ந்த மொய்தீன், 35, நல்லுாரைச் சேர்ந்த லாரி டிரைவர் நாராயணசாமி, 32, டெய்லர் வரதன், 41, ஆகியோரை பிடித்தனர்.விசாரணையில், மொய்தீனுக்கும், விஜய்க்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்தது தெரிந்தது. கடந்த 12ம் தேதி இரவில், மொய்தீன் அழைத்ததால் சென்ற விஜயை, மது அருந்தச்செய்து, மூவரும் சேர்ந்து கழுத்தை நெரித்தும், அறுத்தும் கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், மேலும் விசாரிக்கின்றனர்.


latest tamil news
தாய் மகள் தற்கொலை: கடன் தொல்லை காரணம்கடமலைக்குண்டு--விஷம் குடித்த தாய், மகள் இறந்த நிலையில், மகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார். இச்சம்பவத்திற்கு கடன் தொல்லை காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.தேனி மாவட்டம், வருஷநாடு அருகே சின்ன சாந்திபுரம் கிராமத்தைச் சேர்ந்த நல்லுச்சாமி, 45, மனைவி ஆண்டிச்சி, 35; விவசாய தொழிலாளர்கள். தம்பதி இடையே குடும்ப பிரச்னை இருந்துள்ளது. நேற்று காலை நல்லுசாமி வேலைக்கு சென்றார்.வீட்டிலிருந்த ஆண்டிச்சி, குழந்தைகள் இருவருக்கும் விஷ மாத்திரை கொடுத்து, தானும் சாப்பிட்டுள்ளார். மகன் கிருஷ்ணகுமார் தொடர்ந்து வாந்தி எடுத்ததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள், வீட்டில் சென்று பார்த்துள்ளனர். அங்கு ஆண்டிச்சி, காவ்யா, 17, இறந்து கிடந்தனர்.காவ்யா மயிலாடும்பாறை தனியார் பள்ளியில், பிளஸ் 1 படித்தார். கிருஷ்ணகுமார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறார்.ஆண்டிச்சி தந்தை போலீசில் அளித்த புகாரில், 'எனது மகள் ஒருவரிடம், ௫ லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். அதற்கு, அதிக வட்டி செலுத்தி வந்ததால் மன உளைச்சலில் இருந்தார்' என குறிப்பிட்டார். கடன் தொல்லை காரணமா என, வருஷநாடு போலீசார் விசாரிக்கின்றனர்.


உலக நிகழ்வு்கள்
இந்திய வம்சாவளி சுட்டுக் கொலைநியூயார்க்-அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் பகுதியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சத்னம் சிங் என்பவர், நண்பர் ஒருவரிடம் கார் இரவல் கேட்டு வாங்கியுள்ளார். அந்த காரை, ஒரு பூங்கா அருகில் நிறுத்தி விட்டு, சத்னம் சிங் பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். அப்போது, வேறொரு காரில் வந்த மர்ம நபர்கள், சத்னம் சிங்கை சுட்டுக் கொலை செய்துவிட்டு தப்பினர். குண்டு சத்தம் கேட்டு, அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்த போது, சத்னம் சிங் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இந்த கொலை குறித்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை, போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த வாரம், மேரிலாண்டு நகரில், ஹைதராபா தைச் சேர்ந்த சாய் சரண் என்பவர், தலையில் குண்டு காயத்துடன் காரில் இறந்து கிடந்தார். ஒரு வார இடைவெளியில், அடுத்தடுத்து இரு இந்தியர்கள் கொல்லப்பட்டிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.latest tamil news
பெற்ற குழந்தையை கொலை செய்து ஐஸ் பெட்டியில் வைத்த தாய் கைதுடெட்ராய்ட்-அமெரிக்காவில், பெற்ற குழந்தையை கொலை செய்து, 'ஐஸ்' பெட்டியில் வைத்திருந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

திடீர் சோதனை
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரைச் சேர்ந்தவர் அசுராதி பிரான்ஸ். இவரது வீட்டில், குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, பாதாள அறையில் இருந்த ஐஸ் பெட்டியில், அசுராதி பிரான்சின் 3 வயது குழந்தை சேஸ் ஆலன், உறைந்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அசுராதி பிரான்சை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி, 'நம் நாட்டில் துப்பாக்கியால் மட்டுமின்றி, வீட்டில் உள்ளவர்களாலும் குழந்தைகளுக்கு ஆபத்து உள்ளது கவலை அளிக்கிறது' எனக் கூறி, விசாரணையை தள்ளி வைத்தார். இதற்கிடையே, அசுராதியின் தாய் டோனி ஹெய்ன்ஸ் கூறியதாவது:கண்பார்வையற்ற சேஸ் ஆலன் மீது, எனக்கு தனி பாசம் உண்டு. சமீபத்தில், அசுராதி வீட்டிற்கு சென்ற போது, சேஸ் ஆலனை காணவில்லை. அவன், தன் தாத்தாவின் தோழி வீட்டில் வளர்வதாக அசுராதி கூறினார். ஒருநாள், சிறையில் இருந்து விடுதலையான சேஸ் ஆலன் தாத்தாவை சந்தித்தேன். அப்போது அவர், சேஸ் ஆலன் தன் தோழி வீட்டில் இல்லை என கூறினார்.

சந்தேகம்
எனக்கு அசுராதி மீது சந்தேகம் ஏற்பட்டு, குழந்தைகள் கண்காணிப்பு அமைப்பிடம் தெரிவித்தேன். அவர்கள் சோதனை செய்தபோது தான், சேஸ் ஆலன் கொல்லப்பட்டது தெரியவந்தது.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
28-ஜூன்-202210:52:05 IST Report Abuse
raja தமிழக நடப்புக்களை நாள் தோறும் கொலை கொள்ளை கற்பழிப்பு என்று பார்க்கும் பொது சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக உள்ளது என்று தெரிகிறது... ஆனால் சூப்பரா இருக்குன்னு கேடுகெட்ட நம்பர் ஒன்னு பிரின்சிபால் விடியல் சொல்லுவான்....
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
28-ஜூன்-202210:49:48 IST Report Abuse
raja லு லு கோஷ்டியா இருக்குமோ....
Rate this:
Cancel
28-ஜூன்-202209:14:39 IST Report Abuse
அப்புசாமி அண்ணாமலையார் உத்தரகாண்டில் போய் கூவணும்.அங்கேதான் அவிங்க நல்லாட்சி நடக்குது.
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
28-ஜூன்-202219:40:34 IST Report Abuse
தமிழன்இங்கே மட்டும் என்ன வாழுது?...
Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
30-ஜூன்-202206:09:44 IST Report Abuse
Kasimani Baskaranஅப்புச்சாமி ... ஆதிக்கத்தில் இருக்கும் பொழுது வேறு விதமாக கறுத்துப்போடுவார்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X