பேட்டரி கார் வாங்குவதால் ரூ.53 லட்சம் இழப்பு; மாநகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
திண்டுக்கல் : 'கூடுதல் விலை கொடுத்து பேட்டரி கார் வாங்குவதால் ரூ.53 லட்சம் இழப்பு ஏற்படும்'என, திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் தனபாலன் வலியுறுத்தினார். மேயர் இளமதி தலைமை வகித்தார். துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் விவாதங்கள்:தனபாலன் (பா.ஜ): குப்பை சேகரிக்க 100 பேட்டரி கார்கள் வாங்க ஒப்பந்தம்

திண்டுக்கல் : 'கூடுதல் விலை கொடுத்து பேட்டரி கார் வாங்குவதால் ரூ.53 லட்சம் இழப்பு ஏற்படும்'என, திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் தனபாலன் வலியுறுத்தினார். மேயர் இளமதி தலைமை வகித்தார்.

துணை மேயர் ராஜப்பா, கமிஷனர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர்கள் விவாதங்கள்:தனபாலன் (பா.ஜ): குப்பை சேகரிக்க 100 பேட்டரி கார்கள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 6 நிறுவனங்களில் 0.91 சதவீதம் குறைவாக மதிப்பீடு அளித்த கோவையை சேர்ந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு பேட்டரி கார் ரூ.2.17 லட்சத்திற்கு வாங்கப்பட உள்ளது. ஆனால், அந்நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு பேட்டரி கார் ரூ.1.67 லட்சம் என குறிப்பிட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு ரூ.53 லட்சம் இழப்பு ஏற்படும். இந்த ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.கமிஷனர்:கோவையில் உள்ள நிறுவனத்திடம் இருந்து ஒரு பேட்டரி கார் சோதனை முறையில் வாங்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லுாரியிடம் இருந்து தரச்சான்று மதிப்பின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்படும்.

ஆனந்த் (தி.மு.க): மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு குடியிருப்பு கட்டங்கள் தொண்டு நிறுவனமாக செயல்பட தொடங்கி தற்போது வணிக நோக்கில் செயல்படுகிறது. வணிக கட்டங்களுக்கு குடிநீர், சொத்து வரி வசூலிப்பதில்லை. இதனை ஆய்வு செய்து வரி வசூலித்தால் மாதம் ரூ.45 லட்சத்திற்கு மேல் மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கும்.

கமிஷனர்: ஜூலை 1க்கு பின் நகராட்சி நிர்வாக ஆணையரின் ஒப்புதலுக்கு பரிந்துரைக்கப்படும்.

தனபாலன் (பா.ஜ): புதைச் சாக்கடை திட்டத்தில் குழாய் இணைப்பு கட்டணமாக ரூ.4,800 வசூலிக்கப்படுகிறது. இது தவிர வைப்பு தொகையும் சதுர அடிக்கு ஏற்ப வசூலிக்கின்றனர். 20 அடி நீளம் வரை கட்டணம் இல்லை என கமிஷனர் கூறினார். ஆனால், மக்களிடம் ஒவ்வொரு அடிக்கும் ரூ.250 வசூலிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.மேயர்: இது குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தகவல் பலகை அமைக்கப்படும்.

உமாதேவி (அ.தி.மு.க): வார்டு 31 ல் முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை. துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறையால் குப்பையை அள்ளாததால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

மேயர்: குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்.ஜோதிபாசு (மார்க்சிஸ்ட்): வார்டு 35 ல் பூங்கா பராமரிப்பின்றி உள்ளது. மேயர்:போதிய நிதி கிடைத்ததும பூங்கா பராமரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X