அமுத பெருவிழாவையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
புதுச்சேரி : நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.இந்திய சுதந்திரத்தின் 75வது அமுத பெருவிழாவை முன்னிட்டு, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சில் புதுச்சேரி கிளை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.புதுச்சேரி இளங்கோ நகரில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் அலுவலகத்தில்


புதுச்சேரி : நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.இந்திய சுதந்திரத்தின் 75வது அமுத பெருவிழாவை முன்னிட்டு, இந்திய பட்டய கணக்காளர் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சில் புதுச்சேரி கிளை சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.புதுச்சேரி இளங்கோ நகரில் உள்ள இந்திய பட்டய கணக்காளர் அலுவலகத்தில் துவங்கிய பேரணியை மரைன் இன்ஜினியர் ரகுநாத் வீரவேல் துவக்கி வைத்தார்.



பேரணி, அஜந்தா சிக்னல், முத்தியால்பேட்டை, கோட்டக்குப்பம், சின்ன முதலியார்சாவடி வழியாக, பொம்மையார்பாளைத்தில் நிறைவடைந்தது.பேரணியில் பட்டய கணக்கு பயிற்சி பெறும் மாணவர்கள், புதுச்சேரி கிளையில் உள்ள பட்டய கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.பேரணியில் 75வது சுதந்திர தினத்தின் அமுத பெரு விழா கொண்டாடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொம்மையார் பாளையத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X