பழங்குடியின பிரதிநிதிகள் ஓட்டு யாருக்கு?ஜனாதிபதி தேர்தலில் எகிறும் எதிர்பார்ப்பு!| Dinamalar

பழங்குடியின பிரதிநிதிகள் ஓட்டு யாருக்கு?ஜனாதிபதி தேர்தலில் எகிறும் எதிர்பார்ப்பு!

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (12) | |
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு ஜூலை 1ல் பிரசாரத்தை துவங்க உள்ள நிலையில், பழங்குடி இனத்தை சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கு ஓட்டளிக்க போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 47 இடங்கள்தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு, வேட்பு மனு தாக்கலுக்கு முன்னரே, கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்ட

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தேசிய ஜனநாயக கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு ஜூலை 1ல் பிரசாரத்தை துவங்க உள்ள நிலையில், பழங்குடி இனத்தை சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் யாருக்கு ஓட்டளிக்க போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.



latest tamil news



47 இடங்கள்
தே.ஜ., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்மு, வேட்பு மனு தாக்கலுக்கு முன்னரே, கட்சி தலைவர்களிடம் ஆதரவு திரட்ட துவங்கினார். காங்கிரஸ் தலைவர் சோனியா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரை தொலைபேசியில் அழைத்து ஆதரவு கோரினார்.இந்நிலையில், முர்மு வெற்றி பெறுவதில் சிக்கல் இருக்காது என்பது தெரிந்தாலும், பழங்குடியின எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ., தங்கள் ஆதரவை யாருக்கு அளிப்பர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.லோக்சபாவில், பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு 47 இடங்கள் உள்ளன. இதில், 31 இடங்கள் பா.ஜ., கையில் உள்ளது. ஆனால் சட்டசபைகளில், பா.ஜ.,வுக்கு தேவையான ஆதரவு கிடைக்கும் அளவுக்கு பழங்குடியின எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை இல்லை. எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அளிக்கும் ஓட்டு, தொகுதி வாக்காளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்படுகின்றன.


latest tamil news



ஜூலை 1ல் பிரசாரம்
வடகிழக்கில் உள்ள எட்டு மாநிலங்களிலும் பா.ஜ.,வுக்கு ஆதரவு இருந்தாலும், அம்மாநிலங்களின் மக்கள் தொகை அடிப்படையில், ஓட்டுக்கான மதிப்பீடு குறைவாகவே கிடைக்கும் நிலை உள்ளது.திரவுபதி முர்முவின் சொந்த மாநிலமான ஒடிசாவில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள் இல்லை. இங்கு, ஆளும் பிஜு ஜனதா தளத்தின் ஆதரவை பா.ஜ., நம்பி உள்ளது.முர்மு கவர்னராக பதவி வகித்த ஜார்க்கண்டில், ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இந்த மாநிலத்தை சேர்ந்தவர். எனவே இங்கும் குழப்பமான சூழல் நிலவுகிறது.இதையடுத்து, ஜூலை 1ல் பிரசாரத்தை துவங்கும் திரவுபதி முர்மு, பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

-நமது சிறப்பு நிருபர்-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X