'3 டிரில்லியன்' டாலரை தொட்ட இந்தியா: மத்திய அமைச்சர் கோயல் பெருமிதம்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
கோவை: ''சர்வதேச அளவில், மூன்று டிரில்லியன் டாலர் (236 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரத்தோடு நம்நாடு உயர்ந்து நிற்கிறது,'' என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை (சி.ஐ.ஐ.,), மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, 'இன்வெஸ்ட் இந்தியா' ஆகியவை இணைந்து தொழில் நிறுவன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கோவை: ''சர்வதேச அளவில், மூன்று டிரில்லியன் டாலர் (236 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதாரத்தோடு நம்நாடு உயர்ந்து நிற்கிறது,'' என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறினார்.latest tamil news
இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை (சி.ஐ.ஐ.,), மத்திய அரசின் தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, 'இன்வெஸ்ட் இந்தியா' ஆகியவை இணைந்து தொழில் நிறுவன அதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி கோவையில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், பியுஷ் கோயல் பேசியதாவது:

நம் நாட்டில் டிஜிட்டல் வர்த்தகம் சிறப்பாக உள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் விருப்பப்படி விற்பனையாளர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக்கொள்ள முடிகிறது. இணையவழி இயங்குதளங்கள் கட்டுப்பாடானவை. அவை வணிக நிறுவனங்கள், நுகர்வோர் இடையே பாலமாக விளங்குகிறது. டிஜிட்டல் முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள நல்ல வாய்ப்புகளைப் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


latest tamil news

வெளிப்படை நிர்வாகம்


நம் நாடு அதிக மக்கள் தொகை கொண்டது. நாட்டின் பொருளாதாரம் தற்போது 3.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக (236 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது. மிகுந்த நம்பகத்தன்மையுடைய தலைமை மற்றும் ஜனநாயக கட்டமைப்புடன் நம் நாடு திகழ்கிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் மென்மேலும் உயர்ந்து வருகிறது.அனைத்து துறைகளிலும் வெளிப்படையான நிர்வாகத்தை, மத்திய அரசு ஆதரிக்கிறது. நிலையான கொள்கை வாயிலாக, நல்ல ஸ்திரமான கட்டமைப்பு உருவாகி வருகிறது. ஒவ்வொரு நிறுவனங்களின் முதலீட்டையும் மதித்து வருவதால், ஜவுளி, பொறியியல் உள்ளிட்ட துறைகள் அபரிமிதமாக வளர்ந்து வருகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.

வர்த்தக அமைச்சக இணைச் செயலர் ராஜேந்திர ரத்னு, ஜவுளி அமைச்சக சிறப்புச் செயலாளர் வி.கே.சிங் ஆகியோர் தொழில்துறை நலனுக்காக அந்தந்த அமைச்சகங்களால் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் குறித்துப் பேசினர்.மத்திய தகவல் ஒளிபரப்பு இணை அமைச்சர் முருகன், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) துணைத் தலைவர் கமல் பாலி, தமிழக தலைவர் சங்கர் வாணவராயர் மற்றும் கோவை தலைவர் பிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202215:59:14 IST Report Abuse
 Venugopal S இந்தியப் பொருளாதாரம் மூன்று டிரில்லியன் டாலர்கள், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் 236 லட்சம் கோடி என்று பெருமைப் படும் போது அதில் பத்து சதவீதம் பங்களிப்பு தமிழ்நாட்டில் இருந்து என்பது அதைவிட மகிழ்ச்சியான செய்தி.அதைப் பாராட்ட மாட்டார்களே பாஜகவினர்.
Rate this:
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
28-ஜூன்-202215:49:38 IST Report Abuse
Appan இந்த பிஜேபி ஆட்சிக்கு வந்த பொது இந்தியாவின் GDP எவ்வளவு தெரியுமா ?. 2 .6 Trill dollar .இந்த 8 வருடத்தில் இவர்கள் செய்தது 600 Mill dollar ..அதாவது வருடத்திற்கு 75 mill dollar வளர்ச்சி..இதை போய் பெருமை படுபவர்கள் எப்படி நாட்டை வளர்ச்சிக்கு கொண்டு செல்வார்கள்..80 கலீல் சீனா , இந்தியாவின் GDP சமமாக இருந்தது..இப்போ சீனா 17 Trill dollar ..ஆனால் இந்திய 3 .2 Trill டாலர்..அதாவது சீனாவின் GDP இந்தியாவின் GDP யை விட5 மடங்கு அதிகம்.. சுதந்திரம் வாங்கி 75 வருடம் ஆகியும் இந்திய வறுமையில் தவழ்கிறது..இந்திய அரசியல் அமைப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உகந்தது இல்லை..மத்தில் ஆளும் கட்சி மாநிலத்தை அடிமை போல் நடத்துகிறது..இதனால் நாட்டின் நேரம் விரையம் ஆகிறது..பொருளாதார வளர்ச்சியை விட்டு மதம், மொழி, இனம் .என்று சண்டை போடுகிறார்கள்..இந்தியா மக்களாட்சிநாடு..அதாவது பெரும்பான்மை மக்கள் நாட்டை ஆள்வார்கள்.இங்கு யார் பெரும்பான்மை மக்கள்..?, இந்திக்காரர்கள்..இவர்கள் இன்னும் கற்காலத்தில் உள்ளார்கள்..இவர்கள் நாட்டை ஆண்டாள் என்ன ஆகும்../> அது தான் இந்தியாவில்நடக்கிறது..மாநிலங்கள் அமெரிக்க போல் முழு உரிமையுடன் செயல் பட வேண்டும்..மத்திய அரசு வெளி உறவு, பொருளாதார வளர்ச்சி, ராணுவம் இவர்களைத்தான் செய்யணும்..அதை விட்டு தேவை இல்லத்துக்களை செய்கிறது..இதனால் நாடு ஸ்தம்பித்து விட்டது..இது காங்கிரஸ், பிஜேபி காட்சிகளில் தொடருகிறது..இந்திய அரசியல் அமைப்பை மாறனும்..அப்போ தான் இந்திய வளரும்..
Rate this:
sundaram sadagopan - Bengaluru,இந்தியா
28-ஜூன்-202217:50:19 IST Report Abuse
sundaram sadagopanஇந்தியாவையும் சீனாவையும் ஒப்பிடுவது தவறு. இரண்டு நாடுகளின் ஆட்சி முறை வேறானது . இந்தியாவில் சீனாவின் ஆட்சிமுறையும் சீனாவில் இந்தியாவின் ஆட்சிமுறையும் கொண்டுவந்தால் எப்படி இருக்கும் ?...
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
28-ஜூன்-202214:11:29 IST Report Abuse
Soumya அடடடா முரசொலி படிச்ச ஓசிக்கோட்டர் கொத்தடிமைங்களுக்கு எம்பூட்டு அறிவு துண்டுசீட்ட மிஞ்சிமளவுக்கு அறிவு ஹீஹீஹீ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X