முத்தரையர் பள்ளி நுாறு சதவீத தேர்ச்சி

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
புதுச்சேரி : முத்தரையர்பாளையம், முத்தரையர் மேல்நிலை பள்ளி அரசு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.புதுச்சேரி, முத்தரையர்பாளையத்தில் உள்ள முத்தரையர் பள்ளியில் 107 மாணவ, மாணவிகள் அரசு பொதுத்தேர்வை எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். பிளஸ் 2 மாணவி பீர்த்தி 600க்கு 580 மதிப்பெண் பெற்று பள்ளியில்


புதுச்சேரி : முத்தரையர்பாளையம், முத்தரையர் மேல்நிலை பள்ளி அரசு பொதுத்தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.புதுச்சேரி, முத்தரையர்பாளையத்தில் உள்ள முத்தரையர் பள்ளியில் 107 மாணவ, மாணவிகள் அரசு பொதுத்தேர்வை எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். பிளஸ் 2 மாணவி பீர்த்தி 600க்கு 580 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். 10ம் வகுப்பு மாணவர் மாதேஷ் 500க்கு 482 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தை பெற்றார்.

கணினி பதிவியல் பாடத்தில் 5 மாணவர்கள் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், கணக்கு பதிவியலில் 3 பேர், வணிகவியலில் 3 பேர், பொறியியலில் 3 பேர் நுாறு மதிப்பெண் பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் 29 மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 31 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதித்துள்ளனர்.பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களை, பள்ளி முதல்வர் முத்துராமன் வாழ்த்தி, நினைவுப்பரிசு வழங்கினார். துணை முதல்வர் அனந்தசயனம், தாளாளர் சரஸ்வதி, தமிழரசி, தலைமை ஆசிரியர் தீனன், துணை தலைமை ஆசிரியர் விமல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X