கோவை 'சிட்ரா'வில் 'நாப்கின்' தயாரிப்பு: மத்திய அரசு கொள்முதல் திட்டம்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருப்பூர்: பிரதமரின் மக்கள் நல மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்க, கோவை 'சிட்ரா'விலிருந்து 'சானிட்டரி நாப்கின்' வாங்கப்பட உள்ளது.மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல், கடந்த 25ம் தேதி கோவை வந்தார். தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் (சிட்ரா) உள்ள நவீன தொழில்நுட்பங்களை பார்வையிட்ட அவர், அங்கு நிறுவப்பட்டுள்ள அதிக திறன்மிக்க சானிட்டரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

திருப்பூர்: பிரதமரின் மக்கள் நல மருந்தகங்களில் மலிவு விலையில் வழங்க, கோவை 'சிட்ரா'விலிருந்து 'சானிட்டரி நாப்கின்' வாங்கப்பட உள்ளது.

மத்திய வர்த்தகம் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியுஷ் கோயல், கடந்த 25ம் தேதி கோவை வந்தார். தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி மையத்தில் (சிட்ரா) உள்ள நவீன தொழில்நுட்பங்களை பார்வையிட்ட அவர், அங்கு நிறுவப்பட்டுள்ள அதிக திறன்மிக்க சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் மெஷின் இயக்கம் குறித்து வல்லுனர்களிடம் கேட்டறிந்தார்.



latest tamil news




நேற்றுமுன்தினம்,திருப்பூரில் நடந்த ஏற்றுமதியாளர் சந்திப்பில் பேசிய பியுஷ் கோயல், ''ஒரு நிமிடத்தில் 300 சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் திறன்மிக்க மெஷின் கோவை 'சிட்ரா'வில் உள்ளது. அந்த மெஷின் பெரிய அளவில் இயக்கப்படவில்லை. உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை தொடர்புகொண்டு பேசினேன்; பிரதமரின் ஜன் அவுஷதி திட்டத்தில் செயல்படுத்தப்படும் மருந்தகங்களுக்காக, 'சிட்ரா'விலிருந்து சானிட்டரி நாப்கின் கொள்முதல் செய்யுமாறு தெரிவித்தேன்; வெகு விரைவில் அதற்கான ஆர்டர் வழங்கப்படும்'' என்றார்.

இந்நிலையில், சுகாதாரத்துறையின் அழைப்பை அடுத்து, கோவை 'சிட்ரா' இயக்குனர் பிரகாஷ், நேற்று டில்லி சென்று, ஜன் அவுஷதி திட்ட அதிகாரிகளை சந்தித்து, 'சானிட்டரி நாப்கின்' தயாரிப்பு குறித்து கலந்துரையாடினார்.


தொழில்முனைவோருக்கு வாய்ப்பு


'சிட்ரா' இயக்குனர் பிரகாஷ் கூறியதாவது:
மத்திய ஜவுளித்துறை வழங்கிய மானியத்தில் வாங்கப்பட்ட சீன தொழில்நுட்ப சானிட்டரி நாப்கின் உற்பத்தி மெஷின், 'சிட்ரா'வின் மருத்துவ ஜவுளி பிரிவில் உள்ளது. ஆண்டுக்கு 6 கோடி நாப்கின் தயாரிக்கும் திறன் இருந்தபோதும், 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் எண்ணிக்கையிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது.


latest tamil news




'ஜன் அவுஷதி' திட்டத்தில், மலிவு விலையில் நாப்கின் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 12 கோடி நாப்கின் வழங்கப்பட்டதாகவும், நடப்பு ஆண்டு மேலும் அதிக எண்ணிக்கையில் வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.
அமைச்சரின் துரித செயல்பாடு காரணமாக, டில்லியிலிருந்து உடனடியாக அழைப்பு வந்தது; 'ஜன் அவுஷதி' திட்ட அதிகாரிகளை சந்தித்து, 'நாப்கின்' தயாரிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளேன். மத்திய அரசிடம் இருந்து ஆர்டர் கிடைப்பதால், மருத்துவ ஜவுளிகளில் ஒன்றான நாப்கின் உற்பத்தி உத்வேகம் பெறும். ஏராளமான தொழில்முனைவோர் உற்பத்தியில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.kausalya - Chennai,இந்தியா
28-ஜூன்-202216:56:07 IST Report Abuse
S.kausalya இப்படி எல்லாம் செய்து எங்களை மத்திய அரசின் பிஜேபி விலைக்கு வாங்க முடியாது. நாங்கள் எப்போதும் குவார்ட்டர் க்கும் ஓசி பிரியாணிக்கும் விலை,, துணை போகிறவர்கள். மோடி ஒழிக என்றால் ஒழிக தான்
Rate this:
Cancel
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் தேசமும் தேச மக்களுமே முக்கியம் என்பது தேசிய மாடல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X