தொழிற்கல்வி மாணவருக்கு அண்ணா பல்கலையில் இடம்| Dinamalar

தொழிற்கல்வி மாணவருக்கு அண்ணா பல்கலையில் இடம்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (1) | |
சென்னை: தமிழக இன்ஜினியரிங் சேர்க்கை வரலாற்றில் முதல் முறையாக, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், அண்ணா பல்கலையின் 20 கல்லுாரிகளில் இடம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு வரும் மாணவர்கள், அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


சென்னை: தமிழக இன்ஜினியரிங் சேர்க்கை வரலாற்றில் முதல் முறையாக, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், அண்ணா பல்கலையின் 20 கல்லுாரிகளில் இடம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.



latest tamil news


இன்ஜினியரிங் கவுன்சிலிங்குக்கு வரும் மாணவர்கள், அண்ணா பல்கலையின் சென்னை வளாகத்தில் உள்ள கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி, குரோம்பேட்டை எம்.ஐ.டி., ஆகியவற்றில், தங்களுக்கு இடம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவர்.அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகள் மட்டுமின்றி, பல்கலையில் 17 உறுப்பு கல்லுாரிகளிலும், பிளஸ் 2 தொழில் கல்வி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதில்லை.அரசு கல்லுாரிகள், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் 100 இடங்கள்; சுயநிதி கல்லுாரிகளில் மொத்த இடங்களில் 4 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன.

இதுகுறித்து, நமது நாளிதழில் நேற்று விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி அதிகாரிகள் குழு, நேற்று தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தியது.இதையடுத்து, அமைச்சர் பொன்முடி வெளியிட்ட அறிவிப்பு:இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, இதுவரை எந்த ஆண்டிலும், அண்ணா பல்கலை வளாக கல்லுாரிகள் மற்றும் உறுப்பு கல்லுாரிகளில் இடம் வழங்கியது இல்லை.

இதுகுறித்து, செய்தித்தாளில் வந்த தகவல்கள் குறித்து ஆய்வு நடத்தினோம்.தொழிற்கல்வியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையின் கல்லுாரிகளிலும் இடம் அளிக்க அரசு முடிவெடுத்துள்ளது.இதன்படி, அண்ணா பல்கலையின் வளாக கல்லுாரிகள், உறுப்பு கல்லுாரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகள், தனியார் சுயநிதி கல்லுாரிகள் என, அனைத்து வகை இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், 2 சதவீத இடங்களை, தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news


இந்த நடைமுறை இந்த ஆண்டு நடைமுறைக்கு வரும்.எனவே, தொழிற்கல்வி படித்த மாணவர்கள் இந்த ஆண்டிலேயே, அண்ணா பல்கலையில் இன்ஜினியரிங் படிப்பில் சேரலாம்.அவர்கள் தாங்கள் பிளஸ் 2வில் படித்துள்ள எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகிய ஆறு வகை படிப்புகளில் சேரலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X