பா.ஜ.,விடம் அடிமையாகவுள்ளார் ரங்கசாமி: மாஜி முதல்வர் நாராயணசாமி சாடல்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (49) | |
Advertisement
புதுச்சேரி: 'புதுச்சேரி வளர்ச்சி பெற காங்., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து காங்., சார்பில் நேற்று புதுச்சேரியில் சாரம், பஸ் நிலையம், மிஷன் வீதி உள்ளிட்ட 16 இடங்களில் தர்ணா போராட்டம் நடந்தது.மிஷன் வீதியில் சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் தலைமையில் நடந்த போராட்டத்தை துவக்கி

புதுச்சேரி: 'புதுச்சேரி வளர்ச்சி பெற காங்., மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்' என முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார்.மத்திய அரசின் 'அக்னிபத்' திட்டத்தை கண்டித்து காங்., சார்பில் நேற்று புதுச்சேரியில் சாரம், பஸ் நிலையம், மிஷன் வீதி உள்ளிட்ட 16 இடங்களில் தர்ணா போராட்டம் நடந்தது.



latest tamil news




மிஷன் வீதியில் சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ் தலைமையில் நடந்த போராட்டத்தை துவக்கி வைத்து, முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது;
'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. ஆனால், பிரதமர் மோடி, மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து, ஆட்சியை கவிழ்க்கும் வேலையை பார்க்கிறார்.சிவசேனாவில் இருந்து ஓடியவர்களை அம்மாநில மக்கள் ஓட ஓட விரட்டி அடிக்கின்றனர். ஆனால், புதுச்சேரியில் கட்சி மாறிகளுக்கு ஓட்டு போடுகின்றனர். அந்த நிலை மாற வேண்டும்.

தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகள் எதுவும் நடக்கவில்லை.மூன்று நியமன எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ராஜ்யசபா எம்.பி., பதவியை பா.ஜ., எடுத்துக் கொண்டது போல், வரும் லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.,தான் போட்டியிடப் போகிறது.இந்த நிலையிலும், முதல்வர் நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பா.ஜ.,விடம் ரங்கசாமி அடிமையாக உள்ளார்.

புதுச்சேரி வளர்ச்சி பெற வேண்டுமானால், மீண்டும் காங்., ஆட்சிக்கு வரவேண்டும். தற்போதைய முதல்வர் எதையும் செய்யவில்லை. அவர் எத்தனை நாள் முதல்வராக இருப்பார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

போராட்டத்தில் காங்., மாநில தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
28-ஜூன்-202220:57:44 IST Report Abuse
Ramesh Sargam நாராயணசாமி, சோனியாவிடம் அடிமை ஆகி இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
28-ஜூன்-202220:00:48 IST Report Abuse
MARUTHU PANDIAR ஐயா,,ஐயா உம்மை ஊருக்கு இளவரசர் வின்சி விசிட் அடிச்ச போது,,பொது மக்களில் ஒரு அம்மா உம்மைப் போட்டுக் கொடுத்த்தப்ப என்னமா முழிச்சீரு, நெளிஞ்சீரு, கொழஞ்சீரு,, தப்புப் பண்ண மாணவன் ஹெட் மாஸ்டர் கிட்ட மாட்டிக்கிட்ட மாதிரி, நாடே பாத்து மெச்சிச்சு இல்ல உங்க வீரத்தை.+++உங்க தலைவி இத்தாலி ராணி பின்னாடி நீரு,மஹா பவ்யமாய் கைகட்டி வாய் பொத்தி வந்ததையும் ஜனங்க கிண்டலா பேசிக்கறாங்களே தெரியுமா?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜூன்-202219:25:24 IST Report Abuse
madhavan rajan பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டிருக்கிறார். அதே போல தமிழகத்தில் திமுக காங்கிரசுக்கு அடிமையாக இருக்கிறது என்றோ அல்லது காங்கிரஸ் திமுகவுக்கு அடிமையாக இருக்கிறது என்றோ சொல்லும் துணிவு இவருக்கு இருக்கிறதா? எனக்கு வந்தா மட்டும் ரத்தம் பாலிசிதானா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X