சாமானிய மக்களுக்காக கட்சி நடத்துறதா சொல்ற நீங்களே, அரசு பஸ்ல போறீங்களா என்ன?

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 80 சதவீதத்தை நிறைவேற்றியதாக கூறுகின்றனர். உண்மையாகவே திட்டங்களை நிறைவேற்றி இருந்தால், அதை விளம்பரப்படுத்த தேவையில்லை. ஆனால், 8 சதவீதம் திட்டங்களை கூட அமல்படுத்தவில்லை. பிற நாடுகளில், அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, அது தரமானதாக அமைகிறது; இங்கு அரசு
சீமான், ராமதாஸ்

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளில், 80 சதவீதத்தை நிறைவேற்றியதாக கூறுகின்றனர். உண்மையாகவே திட்டங்களை நிறைவேற்றி இருந்தால், அதை விளம்பரப்படுத்த தேவையில்லை. ஆனால், 8 சதவீதம் திட்டங்களை கூட அமல்படுத்தவில்லை. பிற நாடுகளில், அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, அது தரமானதாக அமைகிறது; இங்கு அரசு அதிகாரிகளே, அதை பயன்படுத்த முடியாதபடி நிலைமை உள்ளது.

அதிகாரிகளை விடுங்க... சாமானிய மக்களுக்காக கட்சி நடத்துறதா சொல்ற நீங்களே, அரசு பஸ்ல போறீங்களா என்ன?


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு: இன்று, இளைஞர்கள் கஞ்சாவால் சீரழிந்து வருகின்றனர். மதுவை விட கஞ்சா கொடூரமானது. அதை ஒழிக்க தீர்மானம் போட்டால் போதாது; கஞ்சாவை ஒழிக்கும் பணியில் போலீசாரை வேகப்படுத்த, மாதம் ஒரு போராட்டம் நடத்த வேண்டும். தேவைப்பட்டால் நானும் வருகிறேன். நாம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தே மதுக் கடைகளை மூடுவது தான். மதுவை ஒழிக்க, அதற்காக பாடுபடும் பா.ம.க.,விற்கு ஓட்டு போட்டால் தான் முடியும்.

'மதுக் கடைகளை மூடுவோம்' என்ற உங்க வாக்குறுதி தான், 'குடி'மகன்களின் ஓட்டுகள் உங்களுக்கு கிடைக்காமலும், ஆட்சிக்கு வர விடாமலும் தடுப்பதாக தெரிகிறது!


அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: கன்னியாகுமரி மாவட்டம், முல்லைசேரிவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர் அஜித் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு, போலீஸ் ஸ்டேஷனில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். போலீஸ் நிலையங்கள் மனித நேயத்தோடும், மனசாட்சியோடும் நடந்து கொள்ள வேண்டிய இடங்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியபொறுப்பு, முதல்வருக்கும், டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கும் இருக்கிறது.


latest tamil newsஉங்களை மாதிரி எதிர்க்கட்சிகள் இப்படி அறிக்கை விட்டு ஒதுங்கி விடுவதால் தான், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கின்றன... களத்தில் இறங்கி போராடுங்களேன்!


உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேச்சு: அனைத்து சமுதாயத்தினரும் படிக்க வேண்டும் என்பதற்காக உருவானது திராவிட இயக்கம். அந்த வழியில், முதல்வர் ஸ்டாலின், திராவிட மாடல் ஆட்சியை செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

தெருவுக்கு தெரு இருக்கும், 'டாஸ்மாக்' கடைகளை கண்டால், அனைத்து சமுதாயத்தினரும், 'குடிக்க' வேண்டும் என்ற அடிப்படையில், அரசு செயல்படுவதாகவே தெரிகிறது!


அகில இந்திய காங்கிரஸ் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு தலைவர் ராஜேஷ்லிலோத்யா பேட்டி: ஜனநாயகத்திற்கு விரோதமான அரசாக, மத்திய பா.ஜ., அரசு திகழ்கிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் ஆதிதிராவிட இனத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்களை, பா.ஜ.,வினர் கற்பழித்து கொலை செய்துள்ளனர். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பொத்தாம் பொதுவா குற்றம் சாட்டக் கூடாது... இதே மாதிரி, காங்கிரசார் மேலயும் அவங்களால குற்றச்சாட்டுகளை அடுக்க முடியும் என்பதை மறந்துடாதீங்க!புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜூன்-202219:12:07 IST Report Abuse
madhavan rajan பாமக தலைவர் நாட்டு நடப்பு தெரியாமல் பேசுகிறார். இவருடைய கட்சியில் 99 சதவிகிதம் பேர் டாஸ்மாக்குக்கு அடிமை. அப்படிப்பட்ட தொண்டர், தலைவர்களை வைத்துக்கொண்டு மதுவை ஒழிப்பேன் என்று கூறுவதை யார் நம்புவார்கள்?
Rate this:
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
28-ஜூன்-202214:02:23 IST Report Abuse
Rafi பாலியல் பலாத்காரம், கொலை வன்முறைகளுக்கு துணையானவர்கள் யார் என்பதை மக்கள் நன்கறிந்து இருக்கின்றார்கள். அவர்களிடம் முறையான நடவடிக்கையை எதிர்பார்த்தால் கட்சியை நடத்தமுடியும்மா?
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
28-ஜூன்-202211:59:45 IST Report Abuse
Dhurvesh இல்லையே நாங்கள் தான் சொகுக்கென்றே 8400 கோடி விமானம் இருக்கே அப்பரும் என்ன நாங்கள் என் பஸ் பற்றி கவலை படணும் சரி ஊருக்கு உபதேசம் நீ என்ன INNVOVACRPTO வில் தானே சொகுசா வாறே அப்புறம் என்ன
Rate this:
thamizh en uyir - Navahrudak,பெலாரஸ்
29-ஜூன்-202208:30:49 IST Report Abuse
thamizh en uyirபாத்தோமே என்னவென்று சொல்ல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X