மானெக் ஷா நினைவு தினம் ஊட்டியில் மலரஞ்சலி

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
குன்னுார் : 'பீல்டு மார்ஷல்' சாம் மானெக் ஷா, 14வது நினைவு தினமான நேற்று, ஊட்டியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நம் நாட்டின் ராணுவத்தில் உயர்ந்த பதவியான, 'பீல்டு மார்ஷல்' பதவி வகித்த சாம் மானெக் ஷா, ராணுவ சேவைக்கு பிறகு, நீலகிரி மாவட்டம் குன்னுாரில் குடியேறினார். கடந்த, 2008 ஜூன், 27ல் மறைந்த அவரது நினைவிடம், ஊட்டி பார்சி ஜோராஸ்ட்ரியன் மயானத்தில் உள்ளது. நேற்று அவரின், 14வது
மானெக் ஷா, நினைவு தினம், ஊட்டி, மலரஞ்சலி,

குன்னுார் : 'பீல்டு மார்ஷல்' சாம் மானெக் ஷா, 14வது நினைவு தினமான நேற்று, ஊட்டியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நம் நாட்டின் ராணுவத்தில் உயர்ந்த பதவியான, 'பீல்டு மார்ஷல்' பதவி வகித்த சாம் மானெக் ஷா, ராணுவ சேவைக்கு பிறகு, நீலகிரி மாவட்டம் குன்னுாரில் குடியேறினார். கடந்த, 2008 ஜூன், 27ல் மறைந்த அவரது நினைவிடம், ஊட்டி பார்சி ஜோராஸ்ட்ரியன் மயானத்தில் உள்ளது.


நேற்று அவரின், 14வது நினைவு தினத்தையொட்டி, வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரி, மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில், மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ராணுவ பயிற்சி கல்லுாரியை சேர்ந்த பிரிகேடியர் சந்தோஷ் உட்பட அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராணுவ இசை இசைத்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூன்-202209:53:36 IST Report Abuse
Chinnappa Pothiraj இந்திய வரலாற்றில் நினைவு கூறத்தக்கவர். தங்களின் திறமையான நாட்டுப்பற்று மிக்க சேவைக்கு வாழ்த்துகள். தங்களின் ஆன்மா இறைவனிடம் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X