தொல்லியல் படிப்புகள்; ஆர்வம் அதிகரிப்பு ஏன்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : பல துறைகளில் வேலைவாப்புகளை தரும் என்பதால் தொல்லியல் படிப்புகளை தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து தொல்லியல் துறை அறிஞர்கள் கூறியதாவது:தொல்லியல் துறையில் பணிபுரிய தமிழ் இலக்கியம் வரலாறு படித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.தற்போது ஏதாவது ஒரு முதுநிலை பட்டம் பெற்றிருந்தால் தமிழக தொல்லியல் துறையில் இரண்டாண்டு தொல்லியல்
தொல்லியல் படிப்புகள், ஆர்வம், வேலை வாய்ப்பு,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை : பல துறைகளில் வேலைவாப்புகளை தரும் என்பதால் தொல்லியல் படிப்புகளை தேர்ந்தெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து தொல்லியல் துறை அறிஞர்கள் கூறியதாவது:தொல்லியல் துறையில் பணிபுரிய தமிழ் இலக்கியம் வரலாறு படித்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.

தற்போது ஏதாவது ஒரு முதுநிலை பட்டம் பெற்றிருந்தால் தமிழக தொல்லியல் துறையில் இரண்டாண்டு தொல்லியல் பட்டயப்படிப்பை படிக்கலாம்.அதேபோல் சென்னை பல்கலையிலும் பட்டப்படிப்பை முடிக்கலாம்.தொல்லியல் துறைக்கு கலை இலக்கியம், வரலாறு, தாவரவியல், விலங்கியல், புவியியல், பொறியியல் என அனைத்து துறைகளின் அறிவும் தேவைப்படுகிறது. அதாவது அகழாய்வில் கிடைக்கும் பொருட்களின் தன்மையைப் பொறுத்து பகுப்பாய்வு செய்யப்படுகிறது.


latest tamil news
அதாவது சுடுமண் பொருட்கள், உலோகங்கள், தானியங்கள் உள்ளிட்ட தாவரப் பொருட்கள், எலும்புகள், கலைப்பொருட்கள் என பலவகைப் பொருட்கள் கிடைக்கும். அவற்றை அந்தந்த துறை சார்ந்தோரால் தான்பகுப்பாய்வு செய்து அந்த கால சமூக வரலாற்றை எழுத முடியும்.அதேபோல் தொல்லியல் துறை படிப்புகளை முடித்தால் சுற்றுலா துறை வேதியியல் பகுப்பாய்வு கூடங்கள் கோவில்கள் அரண்மனைகள் வரலாற்றை விளக்குவது பாரம்பரிய கலை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவது உள்ளிட்ட சுயதொழில்களில் ஈடுபடலாம்.

அரசு துறை வேலைவாய்ப்புகளை நாடலாம் என்பதால் தான் தொல்லியல் படிப்புகளுக்கு அதிக ஆர்வம் உள்ளது.இவ்வாறு அவர்கள்கூறினர்.தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏதேனும் ஒரு முதுநிலை படிப்பபில் 55 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் தமிழக தொல்லியல் துறையின் படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.அடுத்த மாதம் விண்ணப்பங்கள் வழங்கப்படும். 20 மாணவர்கள் மட்டும் சேர்க்கப்படுவர். அவர்களுக்குஆகஸ்டில் வகுப்புகள் துவங்கும். மாணவர்களுக்கு மாத உதவித் தொகையாக 5000 ரூபாய் வழங்கப்படும்.மேலும் விபரங்களுக்கு 044- - 2819 0020 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-ஜூன்-202215:10:17 IST Report Abuse
Kasimani Baskaran நாகரீகம் தோன்றுவது நீர்வரத்து அதிகம் இருக்கும் ஆற்றங்கரைகளில் அல்லது கடலுக்குப்பக்கத்தில்த்தான். அங்குதான் அழிவும் அதிகம் வரும். ஆகவே பண்டைய இந்தியா பல நாடுகளுடன் வர்த்தகத்தொடர்பில் இருந்துள்ளது (எகிப்து, கிரேக்கம், தென் அமெரிக்கா போன்ற பல தேசங்கள்) பல கடலில் மூழ்கிய நகரங்களில் இது போன்ற தொன்மையான பொருள்கள் நிச்சயம் இருக்கும். அதையெல்லாம் விட்டு ஊருக்குள் தோண்டினால் திராவிடம்தான் வரும்...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
28-ஜூன்-202211:43:59 IST Report Abuse
jayvee சிலவருடங்களுக்கு பிறகு.. தொல்லியற்துறை பட்டதாரி டி கடை வைத்துள்ளார் என்று செய்திவரும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X