உதயநிதிக்கு ஐஸ் வைக்க கருணாநிதி படத்தை மறைத்த மேயர்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மேயர் தனது அறையில் உதயநிதியுடன் குரூப் போட்டோ எடுத்துகிட்ட போது, மறைந்த முதல்வர் கருணாநிதி படம் இல்லாமல் இருந்ததால், மூத்த நிர்வாகிகள் பலரும் கொதித்துள்ளனர். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்த உதயநிதி ஸ்டாலினை மேயர் ராமநாதன் வரவேற்றார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக வாங்கப்பட்ட 66 லட்சம் மதிப்புள்ள சாலையோர மண்
உதயநிதிக்கு ஐஸ் வைக்க கருணாநிதி படத்தை மறைத்த மேயர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மேயர் தனது அறையில் உதயநிதியுடன் குரூப் போட்டோ எடுத்துகிட்ட போது, மறைந்த முதல்வர் கருணாநிதி படம் இல்லாமல் இருந்ததால், மூத்த நிர்வாகிகள் பலரும் கொதித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு நேற்று வந்த உதயநிதி ஸ்டாலினை மேயர் ராமநாதன் வரவேற்றார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் புதிதாக வாங்கப்பட்ட 66 லட்சம் மதிப்புள்ள சாலையோர மண் அகற்றும் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தை உதயநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர், மேயர் அவரின் அறைக்கு உதயநிதியை அழைத்துக்கொண்டு சென்றார். அங்கு துாய்மை பணியாளர்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது, உதயநிதி உள்ளிட்டோர் மேயருடன் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர்.

இந்த போட்டோவில் மேயர் இருக்கையின் மேல் முதல்வர் ஸ்டாலின் படமும், உதயநிதி படமும் மட்டுமே இருந்தது. கருணாநிதி படம் ஒரு மூலையில் சிறிய மாலை அணிவிக்கப்பட்டு யார் கண்ணுக்கும் படாத மாதிரி இருந்தது. இதனால் மேயர் அலுவலகத்திற்கு வந்த மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தியடைந்தனர்.

ஸ்டாலினுக்கு அடுத்தப்படியாக உதயநிதி தான் கட்சியில் எல்லாம் என்பதற்காக, அவருக்கு ஐஸ் வைப்பதற்காக, கருணாநிதி படத்தை தனது மேஜைக்கு மேல் இல்லாமல் மேயர் பார்த்துக்கிட்டது ரெம்ப ஓவராக இருக்குனு பலரும் புலம்பியபடி சென்றனர்.

அதை சமயம் மேயருக்கு நேர்மாறாக, துணை மேயர் அஞ்சுகம் தனது மேஜையில், கருணாநிதி, ஈ.வே.ரா., அண்ணாதுரை, ஸ்டாலின் படமும் எல்லாம் வைத்து அசத்தி இருந்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
28-ஜூன்-202217:53:05 IST Report Abuse
RaajaRaja Cholan அது என்ன திருடர்கள் கூடாரமா ,
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
28-ஜூன்-202217:49:27 IST Report Abuse
DVRR ஐய்யையோ இப்போவே படத்துலே தொங்க ஆரம்பிச்சுட்டாங்களா???அப்போ?????
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
28-ஜூன்-202214:15:56 IST Report Abuse
Vena Suna ஆமாம்,,,முன்னுக்கு வர வேண்டாமா? தாத்தா தான் போயிட்டாரே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X