அமெரிக்காவில் லாரியில் 46 அகதிகள் சடலமாக மீட்பு; 16 பேர் கவலைக்கிடம்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் அகதிகள் 46 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் ஆன்டோனியோ பகுதியில் ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியை
Death toll, migrants in San Antonio, Texas ,high temperature, Greg Abbott, Adriana Rocha Garcia ,San Antonio Police, US,, migrants, tractor-trailer , San Antonio ,hospitalized

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் அகதிகள் 46 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் ஆன்டோனியோ பகுதியில் ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. 16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.


latest tamil news


கடுமையான வெப்பம் காரணமாகவும், உடலில் நீர்ச்சத்து வெளியேறியதால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.


latest tamil newsசிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்திய பின்பே முழுமையான விவரம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.


latest tamil newsபுதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manguni - bangalore,இந்தியா
29-ஜூன்-202201:12:36 IST Report Abuse
Manguni அமெரிக்கா மோகமா இல்லை வாழ்வாதார பிரச்சினையா என்று தெரியவில்லை.. ஆனால் உள்ளே இருந்திருக்கும் நிலைமையை நினைத்தால் கண்ணீர் வருகிறது. பாவம் சிறு குழந்தைகள் கூட உள்ளே.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
28-ஜூன்-202218:56:38 IST Report Abuse
madhavan rajan பலர் கனடாவிலிருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவில் குடியேற தினமும் பல வழிகளில் வருகிறார்கள். அதில் ஒன்றுதான் இது. பலமுறை குறைவான சிறப்பாக இருந்தால் வெளியே வராது.
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
28-ஜூன்-202215:39:10 IST Report Abuse
Nellai tamilan இது தான் அமெரிக்காவின் லட்சணம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X