சுத்தியலால் அடித்து மனைவி கொலை: கணவர் போலீசில் சரண்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சிவகங்கை: சிவகங்கையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கையில் சூரக்குளம் ரோடு எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மார்க்ஆண்டனி 45. இவர் மனைவி கற்பகம் 40, மகன்கள் ரவீந்திரன் 22, நவீன் 18. குடும்பத்தை சிவகங்கையில் விட்டுவிட்டு மார்க் ஆண்டனி கர்நாடகாவில் கரிமூட்டம் போடும் வேலை செய்தார். கடந்த 3
சுத்தியலால் அடித்து மனைவி கொலை: கணவர் போலீசில் சரண்

சிவகங்கை: சிவகங்கையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கையில் சூரக்குளம் ரோடு எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் மார்க்ஆண்டனி 45. இவர் மனைவி கற்பகம் 40, மகன்கள் ரவீந்திரன் 22, நவீன் 18. குடும்பத்தை சிவகங்கையில் விட்டுவிட்டு மார்க் ஆண்டனி கர்நாடகாவில் கரிமூட்டம் போடும் வேலை செய்தார். கடந்த 3 நாட்களுக்கு முன் சிவகங்கைக்கு வந்தபோது மனைவி கற்பகத்தின் நடத்தையில் சந்தேகத்துடன் இருந்துள்ளார்.

காலை 7:00 மணிக்கு வீட்டின் முன் கணவன், மனைவி இடையே இது குறித்து தகராறு ஏற்பட்டது. ஆத்திரமுற்ற மார்க்ஆண்டனி சுத்தியலால் மனைவியின் தலையில் அடித்து கொலை செய்து, சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தார். டி.எஸ்.பி., பால்பாண்டி, இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் மனைவியை கொலை செய்த கணவரை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202217:04:47 IST Report Abuse
அப்புசாமி அதே சுத்தியலால். இவனையும் போட்டுத்தள்ளுங்க. 22, 18 வயசுல மகன்கள். இத்தனை வயசுக்கப்புறம் சந்தேகமாம். இருந்தாலும் ஜட்ஜு சுத்தியலால் தட்டுவாரா?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
28-ஜூன்-202213:41:12 IST Report Abuse
jayvee மார்க் ..மார்க் அந்தோணி .. பாவம் பாட்ஷா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X