முறைப்படுத்த இயலாது என்பதால் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை: ஆய்வுக்குழு அறிக்கையில் பரிந்துரை

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு தலைமையிலான ஆய்வுக்குழு, ‛ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், முறைப்படுத்த இயலாது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும்' என தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான சூதாட்ட
Online Rummy, Gambling, Ban, Recommend, Tamilnadu, Govt, ஆன்லைன் ரம்மி, சூதாட்டம், தடை, அவசர சட்டம், சந்துரு, குழு, பரிந்துரை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு தலைமையிலான ஆய்வுக்குழு, ‛ஆன்லைன் விளையாட்டுகளால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும், முறைப்படுத்த இயலாது என்பதால் அதனை தடை செய்ய வேண்டும்' என தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான சூதாட்ட விளையாட்டுகளில் பொது மக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், அதன் காரணமாக கடன் தொல்லை மற்றும் கடும் மன உளைச்சலுக்கும் உள்ளாகின்றனர். இதனால் பல்வேறு சமூக பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்வதால் அத்தகைய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.


latest tamil news


இவ்விளையாட்டுகளினால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு உரிய பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இந்த ஆய்வுக்குழு தெரிவிக்கும் அறிக்கையில் அடிப்படையில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் 71 பக்க அறிக்கையினை நேற்று (ஜூன் 27) தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் lீதிபதி சந்துரு தலைமையிலான ஆய்வுக்குழு அளித்தது.


latest tamil news


இந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில், ‛பொதுமக்களின் உடல்நலம் இந்த விளையாட்டுகளால் பாதிக்கப்படுகிறது. ஆன்லைன் விளையாட்டுத் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் கைவிட்டு புதிய சட்டத்தைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுகிறது. முறைப்படுத்த இயலாது என்பதால் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும்.' என ஆய்வுக்குழு தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202220:46:51 IST Report Abuse
அப்புசாமி சொகுசுக் கப்பலில் சூதாட்டம் ஓக்கேயா? பாண்டிச்சேரியில் சொகுசுக் கப்பலைத் தடை செஞ்சாரே தமிழிசை. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செஞ்சிருக்காரா?
Rate this:
Cancel
Ramamurthy N - Chennai,இந்தியா
28-ஜூன்-202219:51:11 IST Report Abuse
Ramamurthy N ஏன் இந்த விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு முடிவெடுக்கவில்லை? சிலருக்கு தமிழக அரசு ஏற்கனவே செய்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கியது மறந்து போய்விட்டதா? இப்போது ஒரு குழுவின் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் அளித்தால் மட்டுமே தடைவிதிக்க இயலும் என்பது கூட மறந்து ஏன்?
Rate this:
Cancel
28-ஜூன்-202219:09:23 IST Report Abuse
அப்புசாமி சூதாட்டத்தை தடைசெய்ய மாட்டாங்கன்னு நான் சொல்ல வந்தா வசூலில் 50:50 ஷேர் பண்ணிக்கலாம்னு சொல்லவருது ஒரு பிரகிருதி.கர்மம்... கர்மம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X