'சில்' கிளைமேட்டுக்கு துளசி,இஞ்சி கஷாயம்.. நடிகை சீதா டிப்ஸ்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
வாட்டி வதைக்கும் கோடை வெயிலுக்கு, சற்று ஓய்வளிக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்கிறது. இதனால் வெயிலின் உக்கிரம் தணிந்து 'சில்'லென்று உள்ளது. அதேவேளையில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பல பிரச்னைகளையும் இழுத்து விடுகிறது இந்த குளிர்ச்சியான கிளைமேட். இதனால் சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். தொண்டை கரகரப்பு, இருமல் போன்றவை
கசாயம், சீதா, இருமல், தொண்டைகரகரப்பு, ஆரோக்கியம், ஆரோக்கியக்குறிப்புகள், ஹெல்த் டிப்ஸ், ஹெல்த், ஆண்பாவம்சீதா
kashayam, health, tips, healthtips, homeremedies, actressseetha, seetha, mintleaves, ginger, pepper

வாட்டி வதைக்கும் கோடை வெயிலுக்கு, சற்று ஓய்வளிக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக ஆங்காங்கே மழை பெய்கிறது. இதனால் வெயிலின் உக்கிரம் தணிந்து 'சில்'லென்று உள்ளது. அதேவேளையில் இருமல், சளி, காய்ச்சல் போன்ற பல பிரச்னைகளையும் இழுத்து விடுகிறது இந்த குளிர்ச்சியான கிளைமேட். இதனால் சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பாதிக்கப்படுகின்றனர். தொண்டை கரகரப்பு, இருமல் போன்றவை பலருக்கும் பொதுவான ஒன்றாக உள்ளதால், மருந்துக்கடைகளை நோக்கி படையெடுக்க வேண்டியுள்ளது. ஆனால், வீட்டிலுள்ள மருத்துவப்பொருட்களை... அதாங்க மஞ்சள், குருமிளகு, சீரகம் போன்ற மசாலாப் பொருட்களை கொண்டு கஷாயம் வைத்து குடித்தாலே இதை ஒரளவுக்கு சமாளிக்கலாம்.

வீட்டிலேயே எளிமையாக கஷாயம் செய்யும் வழிமுறை குறித்து நடிகை சீதா, சமீபத்தில் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோப்பதிவில் கூறியிருப்பதாவது:


latest tamil news


தற்போதுதான் கொஞ்சம் கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், இஞ்சி, புதினா, கற்பூரவள்ளி மற்றும் பூக்கள் போன்றவற்றை அறுவடை செய்துள்ளேன். இதில் சில பொருட்களை வைத்து இப்போது கசாயம் செய்யலாம். ஏனென்றால் தற்போது மழை பெய்ததால் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. இதனால் பலருக்கும் தொண்டை கரகரப்பு, இருமல் உள்ளது. இதற்கு, இந்த கசாயம் பயனளிக்கும்.

கற்பூரவள்ளி, துளசி, புதினா போன்றவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதில் சிறிதளவு இஞ்சியை தட்டிப் போட வேண்டும். பின்னர், ஒரு டீஸ்பூன், சீரகம் மற்றும் சிறிது குருமிளகை சேர்க்க வேண்டும். பாதியாக வற்றும் வரை கொதிக்க விட்டால் சூப்பரான கஷாயம் ரெடி. இந்த குளிர்ச்சியான பருவநிலைக்கு மிகவும் ஆரோக்கியமானது இது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நடிகை சீதா செடி வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவரின் வீட்டு மற்றும் மாடித்தோட்டத்தில் ஏராளமான செடிகளை வளர்த்து வருகிறார். இதில், கத்தரிக்காய், தக்காளி, முருங்கை, பரங்கிக்காய், புதினா, இஞ்சி, செம்பருத்தி மற்றும் துளசி என செடிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். டிராகன் புரூட் செடியும் இதில் அடக்கம்.


துளசி, கற்பூரவள்ளியின் நன்மைகள்


latest tamil news


துளசி இலைகளில் வைட்டமின் ஏ மற்றும் டி, இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தொற்று நோய்களை தடுக்கவும் உதவுகிறது. துளசி இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிட்டாலும் சிறந்த நன்மையை அளிக்கும்.
துளசி குடல் இயக்கத்தை மேம்படுத்துவதால் செரிமானம் எளிதாகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் உதவுகிறது. துளசியில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் தன்மை, மழைக்கால தொற்றுக்களான சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்த உதவுவதால் கஷாயமாக குடிக்கலாம்.


latest tamil news


அதேபோல் சளி, இருமல் பிரச்சனைக்கு கற்பூரவள்ளியின் இலைகள் தீர்வாகிறது. இதில் கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் பி6 உட்பட பல்வேறு சத்துகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்புச்சக்தியை இது அதிகரிக்கிறது. கற்பூரவள்ளி சாறுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்கு தர, இருமல், சளி பிரச்னை நீங்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X