கோவை வேளாண் பல்கலை ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் இன்று துவங்கியுள்ளது.இதுகுறித்து கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பல்கலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2022 - 23ம் கல்வியாண்டில் இளமறிவியல் பாட பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5:00 மணி
கோவை வேளாண் பல்கலை ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் இன்று துவங்கியுள்ளது.

இதுகுறித்து கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பல்கலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 2022 - 23ம் கல்வியாண்டில் இளமறிவியல் பாட பிரிவுகளில் விண்ணப்பிப்பதற்கான இணையதள சேவை இன்று தொடங்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5:00 மணி முதல் இணையதளம் செயல்படும். வரும் 27.7.22 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். 12 இளம் அறிவியல் பாடபிரிவுகளில் பல்கலைகழக உறுப்பு கல்லூரிகளில் 2148 இடங்களும், இணைப்பு கல்லூரிகளில 2337 இடங்களும் உள்ளன. http://tnau.ucanapply.comஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடபிரிவு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும். 971 இடங்கள் இடஒதுக்கீடு பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே விண்ணப்பத்தில் விருப்ப பாடபிரிவுகளை தேர்வு செய்ய முடியும். ஒரே நபர் ஒவ்வொரு பாட பிரிவிற்கும் தனிதனியாக விண்ணப்பிக்க தேவையில்லை. மாணவர் சேர்க்கை தொடர்பான இதர விபரங்களுக்கு www.tnau.ac.in என்ற தளத்தில் உள்ள தகவல் கையேட்டில் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ் வழியில் வேளாண்மை, தோட்டக்கலை பாடபிரிவுகள் செயல்பட்டு வருகின்றது. 982 ஆசிரியர்கள் பணியில் இருக்கின்றனர். விரிவாக்க கல்வி இயக்கம், ஆராய்ச்சி மையம் என பல இடங்களில் பணிகளில் இருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மாணவர் விகிதம் வேறுபாடு இருப்பது உண்மைதான். கடந்த 8 ஆண்டுகளாக புதிய நியமனங்கள் எதுவும் நடைபெற வில்லை. இந்த அரசின் கவனத்திற்கு இந்த பிரச்னையை கொண்டு சென்றுள்ளோம். அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளது. நீட் தேர்வு ரிசல்ட் வந்தவுடன், வேளாண்மை பாடதிட்டங்களுக்கான அட்மிசன் பணிகள் தொடங்கும்.செப்டம்பர் மாதத்தில் வகுப்புகள் தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X