நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பன்னீர்செல்வம் தரப்பு

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (21) | |
Advertisement
சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாக பன்னீர்செல்வத்தின் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம்
ADMK, Contempt of Court, Chennai HC, அதிமுக, நீதிமன்ற அவமதிப்பு, வழக்கு, பொதுக்குழு, ஓபிஎஸ் தரப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதாக பன்னீர்செல்வத்தின் தரப்பு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், பொதுக்குழு உறுப்பினர்கள் 23 தீர்மானங்களையும் நிராகரித்துள்ளதாக சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் அறிவித்தனர். மேலும், அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த பொதுக்குழு வரும் ஜூலை 11ல் நடைபெறும் என தமிழ்மகன் உசேன் தெரிவித்தார். தீர்மானங்களை நிராகரித்தது மற்றும் அவைத்தலைவர் தேர்வு உள்ளிட்ட நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பினர் குற்றம் சாட்டினர்.


latest tamil news


இந்த நிலையில் பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் பொதுக்குழு, செயற்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது, அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்தது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பாகும். ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு என அறிவிக்கப்பட்டதும் நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velayutharaja Raja - Thirupputhur,இந்தியா
28-ஜூன்-202219:06:37 IST Report Abuse
Velayutharaja Raja எடப்பாடியின் அராஜகத்திற்கு நீதிமன்றம் சவுக்கடி கொடுக்க வேண்டும்
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
28-ஜூன்-202217:13:01 IST Report Abuse
Rengaraj இங்கே கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியா என்று சிலர் சொல்கின்றனர். கட்சியில் ஒற்றுமையாக இருப்பது மாதிரி நடித்து தேர்தலில் மக்களை ஏமாற்றியது சரியா ? மக்களை ஏமாற்றாமல் மதிப்பதும் ஜனநாயகம்தானே ? வோட்டு வாங்க ஒற்றுமையாக இருக்கிறோம் என்று மக்களை நம்பவைத்து ஏமாற்றியது அண்ணா தி மு. க என்ற கட்சியா அல்லது தனிமனிதர்களா ? ரெட்டை இலை சின்னம் அண்ணா தி.மு.க உடையது என்று மக்கள் நம்பினார்கள். இவர்கள் பிளவு பட்டிருந்தால் சின்னம் இருந்திருக்குமா ? மக்கள் வோட்டு போட்டிருப்பார்களா ? மக்களை அவமதிப்பது கட்சி என்ற கண்ணோட்டத்தில் நீதிமன்றம் தலையிடத்தான் வேண்டும். மேலும் கட்சிக்கு இருக்கும் சொத்து மக்கள் நன்கொடையாகவும் தொண்டர்களின் நன்கொடையாகவும் இருக்கும். இவர்கள் சொல்லும் ஒன்றரை கோடி தொண்டர்களின் சார்பாகவும் நீதிமன்றம் தலையிடலாம். ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நீதிமன்றத்தை தவிர ஒரு சாமானியன் எங்கே செல்ல வேண்டும்.?
Rate this:
Kadaparai Mani - chennai,இந்தியா
28-ஜூன்-202219:51:03 IST Report Abuse
Kadaparai Maniநடித்து ஏமாற்றியவர் பன்னீர் செல்வம் .இவருக்கு என்ன தைரியம் மகனை ஸ்டாலினை சந்திக்க வைக்க .அதுவும் விடியல் மிக சிறந்த அரசாட்சி செய்கிறதாம் . நள்ளிரவு கோர்ட் பற்றி சட்டம் தெரிந்தவர்களுக்கு தெரியும் .அதிமுக அழிந்தால் ஒரு கட்சி வளரும் என்று நினைத்து திமுக வலை இல் விழ வேண்டாம் .திமுகவை எதிர்க்க திமுகவால் மட்டும் தான் முடியும் . எடப்பாடியார் இப்போது தொண்டர்களின் முழு ஆதரவு பெற்று உள்ளார் .பன்னீர் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் .இரட்டை இலை முடக்க வேண்டும் என்பது சிலரின் தப்பான கனவு .அதிமுக அழிந்தால் திமுக தவிர வேறு யாருக்கும் லாபம் கிடையாது .புரட்சி தலைவர் செய்த தர்மம் கட்சியை யாரும் அழிக்க முடியாது .ராம வீரப்பன் நிலை தான் பன்னீருக்கு ....
Rate this:
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
28-ஜூன்-202216:44:15 IST Report Abuse
Kadaparai Mani கோர்ட் ஜனநாயக நடைமுறைகளில் தலை இடுவது மிக பெரிய ஆபத்தை கொடுக்கும் .இதை உச்ச நீதி மன்றம் கண்டிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X