ரஷ்ய அதிபர் புடினின் ஆரோக்கிய பழக்க வழக்கங்கள்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அரசியல் கொள்கையில் பலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் உலக அதிபர்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் அதிபர், ஒரு நாளை சரியாகத் திட்டமிடும் அதிபர் என்றால் அது புடின் மட்டுமே என்பதை மற்ற நாட்டு அதிபர்களும் ஏற்றுக்கொள்வர். அவரது அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்துப் பார்ப்போம்.*ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது தினசரி
விளாடிமிர் புடின் பழக்க வழக்கம், புடின் தினசரி செயல்கள், russian president vladimir putin, putin daily routine, daily habits of vladimir putin

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் அரசியல் கொள்கையில் பலருக்கு மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஆனால் உலக அதிபர்களின் ஆரோக்கியத்தை பேணிக்காக்கும் அதிபர், ஒரு நாளை சரியாகத் திட்டமிடும் அதிபர் என்றால் அது புடின் மட்டுமே என்பதை மற்ற நாட்டு அதிபர்களும் ஏற்றுக்கொள்வர். அவரது அன்றாட பழக்கவழக்கங்கள் குறித்துப் பார்ப்போம்.


latest tamil news
*ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது தினசரி அலுவல்களை முடித்துவிட்டு உறங்கச்செல்ல இரவு மூன்று மணி ஆகிவிடும்.

*இதனால் தினமும் காலை 9 மணிக்குமேல் தாமதமாகவே எழுவது அவரது வழக்கம்.

*தனது வழக்கமான நீச்சல், ஜிம் பயிற்சிகளை முடித்துவிட்டு காலை உணவு உண்பார். ஜிம் பயிற்சியின்போது தொலைக்காட்சியில் உலக அரசியல் செய்திகளைக் காண்பார்.


latest tamil news
*70 வயதிலும் உடல் ஆரோக்கியத்தை கட்டிக்காக்கும் புடின், ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிடுவார். ஓட்ஸ் பாயசம், ஆம்லெட், பழச்சாறு உள்ளிட்டவை அவரது காலை உணவில் கட்டாயம் இடம்பெறும். சாப்பிட்ட பின்னர் சிறிதளவு பிளாக் காபி அருந்துவார்.

*மதிய சாப்பாடு முடித்து அவர் பணியை துவங்க மாலை 4 மணிகூட ஆகலாம். பணி நிறைவடைய நள்ளிரவு 2 மணி ஆகிவிடும்.

*ரஷ்ய அதிபர் அலுவலகமான கிரெம்லினில் புடினுக்கு பலகட்ட பாதுகாப்பு வழங்கப்படும். பாதுகாப்புப்படையினர் 24 மணி நேரமும் காவல் பணியில் இருப்பர். அலுவலகத்துக்குள் புடினை எப்போது யாராவது ஒரு காவலர் நோட்டமிட்டபடியே இருப்பார்.


latest tamil news
*கிரெம்லின் கட்டட வாயிலில் இருந்து அவரது கேபினை அடைய சிக்கலான நீண்ட பாதை கட்டடத்தின் உள் அமைக்கப்பட்டு இருக்கும். புதிதாக கிரெம்லினுக்குள் நுழைபவர்கள் சரியான பாதையில் சென்று புடினின் கேபினை அடைவது மிகக் கடினம்.

*கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் நீளம் நீண்டுள்ள இந்த பாதையில்தான் இட வலமாக புடின் நடந்து சென்று தனது கேபினை அடைந்தாகவேண்டும். பணி முடிந்ததும் மீண்டும் நடந்து வாசலை அடைய வேண்டும்.

*உச்சகட்ட பாதுகாப்புக்காக இந்த சிக்கலான பாதை அமைக்கப்பட்டிருந்தாலும் இதன்மூலமாக புடின் தினசரி இரண்டு கிலோமீட்டர் நடைபயிற்சியும் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

*புடின் வேறு நாடுகளுக்குச் செல்லும்போது எப்போதாவது மது அருந்துவார். புகை பிடிக்க மாட்டார். நொறுக்குத்தீனிகளை முற்றிலும் தவிர்ப்பார்.


latest tamil news
*ஓய்வு நாட்களின் மலை ஏறுதல், சர்ஃபிங் செய்தல், கரடி சவாரி செய்தல்(!) உள்ளிட்ட பொழுதுபோக்குகளை மேற்கொள்வார்.

*தனது மனைவி, குடும்பம், மகள்கள் குறித்த தகவல்களை வெளியிட விரும்பாதவர் புடின். குறிப்பாக அலுவக நேரத்தில் குடும்ப விஷயங்களை விவாதிக்கமாட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RK -  ( Posted via: Dinamalar Android App )
28-ஜூன்-202218:02:00 IST Report Abuse
RK புடின் அவர்களை மிகுந்த மரியாதையுடன் பார்த்தேன்.. இப்போது இல்லை.. அப்பாவி மக்களை கொன்று குவிப்பதால் வெறுத்துவிட்டேன்.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
28-ஜூன்-202217:35:56 IST Report Abuse
தமிழன் ஒம்போது மணிக்கு மேலே எந்திரிக்குறது, நாலு மணிக்கு தூங்க போறது, சாயந்தரம் வேலைக்கு போறது, இதுல ஒண்ணு கூட நல்ல பழக்கமா இல்லையே? சரி, இப்ப திடீர்ன்னு எதுக்கு அவரோட வாழ்க்கை வரலாற புரட்டுறீங்க? வாட் ஸ் தி மேட்டர்?
Rate this:
Cancel
P. SRINIVASALU - chennai,இந்தியா
28-ஜூன்-202216:56:34 IST Report Abuse
P. SRINIVASALU இதுயெல்லாம் ஒண்ணா சேர்ந்ததுதான் யோகா. யோகாவிற்கு நிகர் வேறில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X