ஜி7 மாநாட்டில் உலகத் தலைவர்களுக்கு மோடி பரிசு

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
முனிச்: ஜெர்மனியில் நடந்த 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அளித்த இந்தியக் கைவினைப் பொருட்கள் பரிசுகளை பார்த்து உலகத் தலைவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு செல்லும்போது தான் சந்திக்கும் தலைவர்களுக்கு பல பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக நம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறப்பு வாய்ந்த கைவினைப்
Gulabi Meenakari, black pottery, ittar, Kashmiri carpet,  PM Modi, gift, world leaders, G7 meet

முனிச்: ஜெர்மனியில் நடந்த 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி அளித்த இந்தியக் கைவினைப் பொருட்கள் பரிசுகளை பார்த்து உலகத் தலைவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

பிரதமர் மோடி, வெளிநாடுகளுக்கு செல்லும்போது தான் சந்திக்கும் தலைவர்களுக்கு பல பரிசுகளை வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். குறிப்பாக நம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறப்பு வாய்ந்த கைவினைப் பொருட்களைத் தேர்வு செய்து அவர் பரிசாக வழங்குவார்.அந்த வகையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் நடந்த, ஜி - 7 மாநாட்டில் பங்கேற்க சென்ற மோடி, அங்கு வந்த உலகத் தலைவர்களுக்கு இந்திய கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கினர். அவற்றின் கலையம்சங்கள், நுட்பமான தொழில் திறன் உள்ளிட்டவற்றை பார்த்து உலகத் தலைவர்கள் ஆச்சரியமடைந்தனர்.


latest tamil newsஉத்தர பிரதேசத்தின் நிஜாமாபாதில் தயாரிக்கப்படும் கறுப்பு நிற மண் பாண்டங்களை, ஜப்பான் பிரதமருக்கு வழங்கினார்.


latest tamil news


Advertisement


அதுபோல, சத்தீஸ்கரில் புகழ்பெற்ற டோக்ரா கலைப் பொருட்களை, தென் ஆப்ரிக்கா, ஆர்ஜென்டீனா அதிபர்களுக்கு வழங்கினார்.


மாதுளை விதை பசைlatest tamil newsஅமெரிக்க அதிபருக்கு, உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் தயாரிக்கப்படும் குலாபி மீனாகாரி என்ற சிறப்பு வாய்ந்த கலைப் பொருளை மோடி பரிசாக அளித்தார். இது புவிசார் குறியீடு பெற்றுள்ளது. வாரணாசியில் கிடைக்கும் மீனா கண்ணாடி துாளாக்கப்பட்டு, மாதுளை விதை பசை மூலம் ஒட்டப்படுகிறது. மிகுந்த கலை வேலைபாடுகள் உடையதுஇந்த கலைப் பொருள். குலாபி எனப்படும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பது இதன் சிறப்பு அம்சமாகும்.இதைத் தவிர அமெரிக்க அதிபருக்கும், அவருடைய மனைவிக்கும் உடை அலங்கார ஆபரணத்தையும் மோடி வழங்கியுள்ளார்.


latest tamil newsபிரிட்டன் பிரதமருக்கு, பிளாட்டின நிறத்திலான கலையம்சம் நிறைந்த தேனீர் கோப்பைகளை வழங்கினார்.


வாசனை திரவியம்latest tamil newsபிரான்ஸ் அதிபருக்கு, லக்னோவில் புகழ்பெற்ற இயற்கை பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் வாசனை திரவியத்தை வழங்கினார். இது காதி பட்டால் உருவாக்கப்பட்ட பிரான்ஸ் தேசியக் கொடி பொறிக்கப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது.


latest tamil newsஇத்தாலி பிரதமர் மாரியே ரகிக்கு, ஆக்ராவில் தயாரிக்கப்பட்ட மார்பிள் இன்லே டேபிள் டாப்-பை பரிசாக மோடி கொடுத்தார்.


latest tamil newsமாநாட்டுக்கு தன்னை அழைத்த ஜெர்மன் பிரதமருக்கு, உத்தர பிரதேசத்தின் மொராதாபாதில் தயாரிக்கப்படும், உலோகத்திலான கலையம்சம் நிறைந்த குடுவையை வழங்கினார்.


latest tamil newsசெனகல் அதிபர் மக்கி சல்லுக்கு உ.பி., மாநிலம் சித்தப்பூரில் தயாரிக்கப்பட்ட கோரைப்புல்லால் செய்யப்பட்ட கூடைகள் மற்றும் பருத்தி துணிகளை பரிசாக வழங்கினார்.


latest tamil newsஇந்தோனேஷியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான ராமாயண கலாசார பிணைப்பை விளக்கும் வகையில், ராம தர்பார் சிலையை அந்த நாட்டு பிரதமருக்கு மோடி வழங்கினார்.


latest tamil newsஉலகப் புகழ்பெற்ற காஷ்மீர பட்டு தரைவிரிப்பை, கனடா பிரதமருக்கு வழங்கினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202204:36:51 IST Report Abuse
J.V. Iyer அழகு, அழகு.. பிரதமர் செய்யும் அத்தனையும் கலை அழகு.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
28-ஜூன்-202217:46:36 IST Report Abuse
Soumya நம்ப டுமீல்நாட்டில் தயாரிக்கப்படும் டாஸ்மாக்கை அன்பளிப்பு செய்திருந்தால் ஓசிக்கோட்டர் கொத்தடிமைங்களும் நம்பிள் டுபாக்கூர் விடியலும் எம்பூட்டு சந்தோசப்பட்டுருப்பானுங்க சார்
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
28-ஜூன்-202217:28:34 IST Report Abuse
தமிழன் இந்தியப் பிரதமரை பற்றி உலகமே அறிந்து வைத்துள்ளது, இங்கிருக்கும் கொத்தடிமை தமிழனை தவிர.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X