கலரிங் செய்த உங்கள் கூந்தலை பாதுகாக்க...!

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
கூந்தலுக்கு கலரிங் செய்வதுதான் இன்றைய டிரென்ட். டீன் ஏஜ் பருவத்தினர் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் கலரிங் செய்வது பேஷனாகி வருகிறது. எங்கேயாவது விழாக்களுக்கோ அல்லது வெளியூரோ செல்ல நேரிட்டால் அவசரகதியில் பலரும் ஹேர் கலரிங் செய்வர். எனவே உங்களின் கலரிங் செய்யப்பட்ட வண்ணக்கூந்தலை பராமரிக்கும் சில வழிமுறைகளை பார்க்கலாம்... சூரியக்கதிர்கள் கூந்தலின் மீது
ஹேர்கலரிங், கூந்தல்பராமரிப்பு, கூந்தல், அழகுக்குறிப்புகள், ஆரோக்கியம், ஹெல்த்டிப்ஸ், ஹேர்கலரிங்டிப்ஸ், கலரிங், அழகு
hairhealth, hair, haircolouring, colouring, beautytips, beauty, tips

கூந்தலுக்கு கலரிங் செய்வதுதான் இன்றைய டிரென்ட். டீன் ஏஜ் பருவத்தினர் மட்டுமின்றி இல்லத்தரசிகளும் கலரிங் செய்வது பேஷனாகி வருகிறது. எங்கேயாவது விழாக்களுக்கோ அல்லது வெளியூரோ செல்ல நேரிட்டால் அவசரகதியில் பலரும் ஹேர் கலரிங் செய்வர். எனவே உங்களின் கலரிங் செய்யப்பட்ட வண்ணக்கூந்தலை பராமரிக்கும் சில வழிமுறைகளை பார்க்கலாம்...


latest tamil news


சூரியக்கதிர்கள் கூந்தலின் மீது நீண்டநேரம் படும்போது ஹேர்கலரிங்கில் உள்ள ரசாயனங்களுடன் சேர்வதால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. நிறம் குறைய வாய்ப்புள்ளதால் நீண்ட நேரம் வெயிலில் நிற்பதை தவிர்க்கவும். அல்லது இதுபோன்ற சூழலில் தொப்பி அணியலாம்

அதிகளவிலான உப்பு நிறைந்த போர்வெல் தண்ணீர் கூந்தலை நிறத்தை பாதிக்காமல் இருக்க ஷவர் கேப் அணிந்து குளிக்கலாம்.


latest tamil news


கலரிங் செய்யப்பட்ட கூந்தல் போதியளவு சத்து இன்றி அதன் இயற்கைத்தன்மையை இழக்க வாய்ப்புள்ளது. எனவே கூந்தலை வலுப்படுத்த புரதச்சத்து அதிகளவில் உள்ள ஷாம்பூ, கண்டிஷனர்களை பயன்படுத்தலாம். அப்போது கூந்தலின் கடினத்தன்மை குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பும்.

சல்பேட் இல்லாத அல்லது குறைந்தளவில் உள்ள ஷாம்பூகளை பயன்படுத்தும்போது கூந்தலின் தன்மை பாதுகாக்கப்படும். சல்பேட் இல்லாத ஷாம்பூவில் வழக்கமான ஷாம்பூவை விட குறைவான இரசாயனங்கள் உள்ளன. எனவே நிறம் அப்படியே இருக்கும். கூந்தலும் மென்மையாக சுத்தப்படுத்தப்படும். ஈரப்பதத்தை தக்க வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படும்.


latest tamil news


கூந்தல் வளர்ச்சியில் தேங்காய் எண்ணெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெயை உங்கள் கூந்தலில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால் உச்சந்தலை மற்றும் கூந்தலுக்கு ஈரப்பதம் கிடைக்கிறது. அப்போது வேர்க்கால்களில் எண்ணெய் ஊடுருவி சத்து கிடைப்பதால் கூந்தல் வலுவடையும்.

நீச்சல்குளங்களில் உள்ள தண்ணீரில் அதிகளவு குளோரின் கலக்கப்படுவதால், கலரிங் செய்யப்பட்ட கூந்தல் பாதிக்கக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே வீட்டுக்கு வந்தவுடன் சாதாரண தண்ணீரில் கூந்தலை ஒருமுறை அலசவும். அதேபோல் சூடான தண்ணீரில் தலைக்கு குளிப்பதையும் தவிர்க்க வேண்டும்.


latest tamil news


மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன்கள் உள்ள ஹேர் ஸ்பிரேயர்களை பயன்படுத்தும்போது, வெளியே எவ்வளவு நேரம் இருந்தாலும் பாதிப்பு இருக்காது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X