ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநராக ஆகாஷ் அம்பானி நியமனம்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, ‛ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' குழுமத் தலைவராக உள்ளார். இவரின் ஜியோ நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், ஜியோ நிறுவன இயக்குநர் பதவியில் இருந்து அவர் நேற்று (ஜூன் 27) ராஜினாமா
Akash Ambani, Reliance Jio, Chairman, Replaces, Father, Mukesh Ambani, முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ, தலைவர், இயக்குநர், ஆகாஷ் அம்பானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: ரிலையன்ஸ் ஜியோ நிறுவன இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி, ‛ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்' குழுமத் தலைவராக உள்ளார். இவரின் ஜியோ நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், ஜியோ நிறுவன இயக்குநர் பதவியில் இருந்து அவர் நேற்று (ஜூன் 27) ராஜினாமா செய்துள்ளார்.


latest tamil news


நேற்று நடைபெற்ற ஜியோவின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, பங்கஜ் மோகன் பவார் ஜூன் 27 முதல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்கவும், முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியை இயக்குநராக நியமிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவன இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆகாஷ் அம்பானி நியமனம் குறித்து பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ தாக்கல் செய்த அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
30-ஜூன்-202208:41:40 IST Report Abuse
Tamilan இப்படி அரசின் ஒட்டுமொத்த வருமானத்தில், பாத்தியா ஒரு குடும்பம் கொள்ளையடித்து வைத்துள்ளது.
Rate this:
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,சிங்கப்பூர்
29-ஜூன்-202203:41:42 IST Report Abuse
கதிரழகன், SSLC அதென்னமோ தெரியல என்ன மாயமோ தெரியல தாத்தா வை விட மகன் ஜோரா இருக்காரு. மகனை விட பேரன் சினிமா ஸ்டார் கணக்கா இருக்காரு. காசு மட்டும் வந்துட்டா, சம்பந்தம் பேச பணம் ஜாதி அந்தஸ்து அழகு வெள்ளை தோல் எல்லாம் பாத்து செய்யுராக. சினிமாவுல மட்டும்தான் குப்பத்து கருப்பு ரவுடி வெள்ளைத்தோல் வடநாட்டு தேவதையை கட்டிக்குவான். நம்ம விசிலடிச்சான் ரசிக பெருமக்களும் ஆ ன்னு வாய பொளந்துக்கிட்டு பாத்துட்டு காசை கொடுக்குறாங்க.
Rate this:
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
28-ஜூன்-202219:07:00 IST Report Abuse
chennai sivakumar Mr. Mukesh Ambani is a highly shrewed businessman. Hope குட்டி 16 அடி பாயுமா?? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X