ஆண்கள் கழிவறையில் இடம்பிடித்த அறை : இணையத்தில் வைரல்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
பெங்களூரு சர்வதேச விமானநிலையத்திற்குள், ஆண்கள் கழிவறையில் இடம்பெற்றிருந்த அறை குறித்த புகைப்படம், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பேசு பொருளாக மாறியது. தற்கால வாழ்க்கைச்சூழலில் குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு பங்கு உண்டு என உணர்த்தும் வகையில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில், குழந்தைகளுக்கு டயாபர் மாற்றும் அறை
பெங்களூர்,சர்வதேச விமானநிலையம்,பாலின சமத்துவம்,குழந்தை வளர்ப்பு, வைரல், Twitter,netizens,Viral Image, Gender equality,


பெங்களூரு சர்வதேச விமானநிலையத்திற்குள், ஆண்கள் கழிவறையில் இடம்பெற்றிருந்த அறை குறித்த புகைப்படம், சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பேசு பொருளாக மாறியது.தற்கால வாழ்க்கைச்சூழலில் குழந்தை வளர்ப்பில் ஆண்களுக்கு பங்கு உண்டு என உணர்த்தும் வகையில், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமானநிலையத்தில் உள்ள ஆண்கள் கழிவறையில், குழந்தைகளுக்கு டயாபர் மாற்றும் அறை இடம்பெற்றுள்ளது.


latest tamil news


இது குறித்த புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்த சுகாடா என்ற பயனர், 'இது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் ஆண்கள் கழிப்பறையில் காணப்பட்ட டயாபர் மாற்றும் நிலையம். குழந்தை பராமரிப்பு என்பது ஒரு பெண்ணின் பொறுப்பு மட்டுமல்ல.' என பதிவிட்டிருந்தார்.


latest tamil news


பாலின சமத்துவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவரது பதிவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். ஆயிரக்கணக்கான கமெண்டுகள் குவிந்தன. மேலும் விமானநிலைய நிர்வாகத்தின் முயற்சிக்கு ஏராளமானோர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
ஒரு டிவிட்டர் பயனர், ” பெரும்பாலான சர்வதேச விமான நிலையங்களில் இதைப் பார்த்திருக்கிறேன் ! ஆனால் இந்தியா படிப்படியாக, பாலின சமத்துவ கட்டமைப்பில் இணைவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” எனவும், மற்றொருவர், ”இது விதிவிலக்கு என்பதை விட எல்லா இடங்களிலும் வழக்கமாக இருக்க வேண்டும்”, ”அழகானது” என பதிவிட்டுள்ளனர்.latest tamil news


மேலும் மற்றொருவர், நம் நாட்டின் வேறு சில பகுதிகளில் உள்ள சிறப்பான விஷயங்களை குறிப்பிட்டு பதிவிட்டனர். குறிப்பாக மும்பை - புனே விரைவுசாலையில், உணவகத்தில் உள்ள கழிவறையில் மூத்த குடிமக்களுக்கு என டயாபர் மாற்றும் அறை இருப்பதை படத்துடன் பதிவிட்டார். இது குறித்து பலர், தங்களுடைய அனுபவங்களை நெகிழ்ச்சியுடன் டுவிட்டரில் பகிரவே பேசுபொருளாகியது.
சமீபத்தில் தான் தெற்காசிய, இந்திய அளவில், சிறந்த விமானநிலையமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையம் தேர்வாகி சர்வதேச விருது பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
29-ஜூன்-202215:33:25 IST Report Abuse
Vena Suna பாதி வீட்டில் பெண்கள் வேலை செய்வதில்லை. ஆண்கள் தான் இந்த ஏழைகளையும் செய்கிறார்களா இந்தியாவில்..இது காலத்தின் கட்டாயம்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஜூன்-202213:19:06 IST Report Abuse
r.sundaram கற்பு என்பதை பொதுவில் வைப்போம், என்பதைப்போல் குடும்ப பொறுப்பும் பொதுவில் வைக்கப்பட வேண்டும். அந்த பொறுப்பு என்பது கணவனுக்கோ, மனைவிக்கோ தனியானது அல்ல, அது இருவருக்குமானது.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
29-ஜூன்-202211:56:55 IST Report Abuse
அம்பி ஐயர் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X