ஸ்லிம் பியூட்டியா தெரியணுமா? புடவையை பார்த்து வாங்குங்க போதும்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
'ஸ்லிம்மா சிம்ரன் மாதிரி இருந்தாதான் புடவை கட்டினால் அழகாக இருக்கும். நமக்கு எல்லாம் செட் ஆகாது' என்பது உடல் பருமனாக உள்ள பலரின் தவறான நினைப்பு. ஆனால், ஒவ்வொருவரின் நிறம், உயரம், உடல் அமைப்புக்கு தகுந்தாற்போல் புடவையை தேர்வு செய்தாலே அத்தனை பேரும் அழகாய் தெரியலாம் புடவையில். புடவையை தேர்வு செய்யும் போது கொஞ்சம் கவனமா இருந்தால் போதும் நீங்கள் தேவதையே... புடவை அழகாக
புடவை, அழகுக்குறிப்புகள், அழகு, பேஷன், புடவைதேர்வு, புடவையில்அழகாக, டிப்ஸ், 
saree, fashion, beautytips, beauty, womensinsarees, wearingsarees, tips

'ஸ்லிம்மா சிம்ரன் மாதிரி இருந்தாதான் புடவை கட்டினால் அழகாக இருக்கும். நமக்கு எல்லாம் செட் ஆகாது' என்பது உடல் பருமனாக உள்ள பலரின் தவறான நினைப்பு. ஆனால், ஒவ்வொருவரின் நிறம், உயரம், உடல் அமைப்புக்கு தகுந்தாற்போல் புடவையை தேர்வு செய்தாலே அத்தனை பேரும் அழகாய் தெரியலாம் புடவையில். புடவையை தேர்வு செய்யும் போது கொஞ்சம் கவனமா இருந்தால் போதும் நீங்கள் தேவதையே...

புடவை அழகாக இருந்தாலும் உங்களுக்கு பொருத்தமாக இருக்குமா என யோசிக்க வேண்டும். உங்களின் உடல் வகை, அமைப்பு, நிறம் மற்றும் உயரத்துக்கு ஏற்ப புடவைகளை தேர்வு செய்யுங்கள். அப்போது தான் உடலோடு பொருந்தி அழகிய, ரிச் லுக் கிடைக்கும்.


latest tamil newsபுடவையில் ஒருசில மெட்டீரியல் வகை உங்களின் தோற்றத்தை மிகைப்படுத்திக் காட்டும். ஆர்கன்சா, பட்டு, பருத்தி போன்றவை உங்களை மேலும் பருமனாக இருப்பது போல் காட்டலாம். உடையின் பாரமும் அதிகமாக இருக்கும். உங்களின் இடுப்புக்கு கீழே பருமாக இருப்பது போல் காட்டும். எனவே, ஜார்ஜெட், ஷிபான், சாடின் அல்லது கிரேப் போன்ற இலகுரக புடவைகளுக்கு முக்கியத்துவம் தரவும். இது உங்களின் உடலை அழகாக தழுவி, திருத்தமான தோற்றத்தை தரும்.


கணமான அடர்த்தியான எம்பிராய்டரி வேலைப்பாடுகள், அகலமான ஜரிகை, பார்டர் கொண்ட புடவைகளின் பக்கம் பருமனானவர்கள் பார்வையை தவிர்க்கலாம். புடவையில் மெல்லிய பார்டர் இருந்தால் தூக்கலாக இருக்கும். பிரிண்டட் புடவைகளை பொருத்தவரை சிறிய, பரவலான பிரிண்ட்களை தேர்வு செய்யுங்கள்.


latest tamil newsபுடவையை தேர்வு செய்யும் போது, அதன் நிறத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கருப்பு, சிவப்பு, ஊதா போன்ற நிறங்களின் ஷேட் கொண்ட புடவைகளை தேர்வு செய்யுங்கள். அடர் நிறங்கள் உங்களின் அதிக எடையை மறைக்கும் கவசமாக இருக்கும். நீங்கள் மெலிதாக இருப்பது போன்ற தோற்றத்தையும் தரும். இது தவிர வெளிர் பச்சை, பிரகாசமான நியான் மற்றும் வெள்ளை ஆகிய ஷேட்களும் கூட உங்கள் சேலையை அழகாகக் காட்டும்.

புடவையை மடிப்பு எடுத்து கட்டுவதில் கூடுதல் கவனம் தேவை. மிகவும் நீளமான புடவையை தவிர்க்க வேண்டும். உங்களின் உடல் அமைப்புக்கு தேவையான அளவு உள்ளதா என கவனம் செலுத்தவும். உள்பாவாடை தேவையான அளவு இறுக்கமாக உள்ளதா என முன கூட்டியே சரிபார்த்துக் கொள்ளவும். 4 அல்லது 5 மடிப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும். அதிக மடிப்புகள் உங்களின் எடையை அதிகரித்துக் காட்டும்.


latest tamil newsபுடவைக்கு பொருத்தமான பிளவுஸ், அணிகலன்களும், உங்களின் தோற்றத்தை மெருகேற்றிக் காட்டும். உங்களின் உடல் அமைப்பு, வளைவுக்கு ஏற்றவாறு பொருத்தமான பிளவுஸ் அணிய வேண்டும். சற்று தளர்வாகவோ அல்லது இறுக்கமாகவோ இருக்கக்கூடாது. முழுக்கை, முக்கால் கை பிளவுஸ்கள் சிறந்த தேர்வாக இருக்கும். கணமான, பட்டை செயின்களை தவிர்த்து, மெலிதான, டிரெண்டிங்கான நகைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கனமான மேக்கப்பைத் தவிர்த்து லேசான மேக்கப் மட்டுமே இருக்க வேண்டும். கூந்தல் அலங்காரத்திலும் கவனம் தேவை; தளர்வாகவோ, பின்னலிட்டோ அல்லது ப்ரீ ஹேர் விட்டோ செல்லும் இடத்துக்கேற்ப இருக்கலாம்.

எப்போதும் உங்களின் குறைகளையே நினைக்காமல், மனதிலிருந்து அதை தூக்கியெறிந்து விட்டு, கம்பீர நடை போடுங்கள். இது உங்களை உற்சாகமாக காட்டும். உங்களின் தோற்றத்தையும் மிகைப்படுத்தி அழகை மெருகேற்றிக் காட்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X