அரபிக்கடலில் ஹெலிகாப்டர் விபத்து; 4 பேர் பலி

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
மும்பை: அரபிகடலில் ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது விபத்தானது. இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) அரபிக்கடலில் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது, அவை கடலுக்கு அடியில் உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி
ONGC, Helicopter, Emergency Landing, Rig, Arabian Sea, 4 Dead, ஓஎன்ஜிசி, ஹெலிகாப்டர், அவசர தரையிறக்கம், அரபிக்கடல், விபத்து, பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: அரபிகடலில் ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது விபத்தானது. இதில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 4 பேர் உயிரிழந்தனர்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓஎன்ஜிசி) அரபிக்கடலில் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்களை கொண்டுள்ளது, அவை கடலுக்கு அடியில் உள்ள நீர்த்தேக்கங்களிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை உற்பத்தி செய்யப் பயன்படுகின்றன. இந்த நிலையில் மும்பையில் இருந்து அரபிக்கடல் வழியாக ஓஎன்ஜிசி பணியாளர்களை ஏற்றிச் சென்ற பவன் ஹான்ஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டபோது, இறங்க வேண்டிய இடத்தில் இருந்து சுமார் 1.5 கி.மீ தொலைவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.


latest tamil news


மும்பைக்கு மேற்கே உள்ள சாகர் கிரண் என்னும் எண்ணெய் கிணறு அருகே இந்த விபத்து நடந்தது. விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக அந்த இடத்தில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 6 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக ஓஎன்ஜிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X