தையல் தொழிலாளி தலையை துண்டித்து கொடூரம் : ராஜஸ்தான் முழுதும் பதற்றம்

Updated : ஜூன் 29, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (53) | |
Advertisement
மும்பை: ராஜஸ்தானில், பட்டப்பகலில் தையல் தொழிலாளி தலையை துண்டித்து சமூக வலை தளங்களில் வீடியோவாக வெளியிட்ட கொடூர சம்பத்தால் ராஜஸ்தான் முழுவதும் பற்றம் நிலவுகிறது..ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் மால்டா என்ற நகரில், ஜவுளிக்கடைக்குள் அத்துமீறி புகுந்த இரு மர்ம நபர்கள், அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை
 Udaipur Tense After Tailor Kanhaiya Lal Murdered For Social Media Posts

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

மும்பை: ராஜஸ்தானில், பட்டப்பகலில் தையல் தொழிலாளி தலையை துண்டித்து சமூக வலை தளங்களில் வீடியோவாக வெளியிட்ட கொடூர சம்பத்தால் ராஜஸ்தான் முழுவதும் பற்றம் நிலவுகிறது..

ராஜஸ்தானின் உதய்பூர் மாவட்டம் மால்டா என்ற நகரில், ஜவுளிக்கடைக்குள் அத்துமீறி புகுந்த இரு மர்ம நபர்கள், அங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று பொது இடத்தில் வைத்து தலையை துண்டித்தனர். இதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


latest tamil newsபோலீசார் நடத்திய விசாரணையில், படுகொலை செய்யப்பட்ட இளைஞர் கன்ஹையா லால் என்பதும், அப்பகுதி ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த தையல் தொழிலாளி என்பதும், சர்ச்சையில் சிக்கியுள்ள பா.ஜ., செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்டதால், அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


மிரட்டல் வீடியோ வெளியிட்ட கொலையாளிகள்இளைஞரை கொடூரமாக கொன்ற கொலையாளிகள் மிரட்டல் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் யாரேனும் நுபுர் சர்மாவிற்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கும் இதே நிலைதான் என எச்சரிக்கும் விதமாக அந்த் வீடியோவில் தெரிவித்துள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவிய நிலையில், கடையடைப்பு , வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற, வன்முறை சம்பவங்களும் நடந்ததால் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
கொலையாளிகள் கைது


இதற்கிடையே கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றி வீடியோ வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருவதாகவும், இது ஐ.எஸ்., பயங்கரவாதிகளின் பாணியில் நடந்த பயங்கரவாத சம்பவம் என கூறப்பட்டு வருவதால், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் விசாரணை நடத்த ராஜஸ்தான் விரைந்துள்ளனர்.


அமைதி காக்க அரசு வேண்டுகோள்


கொடூர கொலைச் சம்பவம் மாநிலம் முழுவதும் காட்டுத்தீயாக பரவியதையடுத்து, மாநிலத்தில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில காங்., முதல்வர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
30-ஜூன்-202218:57:28 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy தனிப்பட்ட இருவர் கொலை செய்ததாக விசாரிக்கிறார்கள். இது மேலிட கட்டளை மொத்த இந்துக்களை யும் எச்சரிப்பதாம். அரசு கவனம் கொள்ளவில்லை என்றால் இந்துக்கள் அடிமைகள் என்பது உண்மை ஆகிவிடுகிறது. இது மனித இனத்திற்கு நல்லது அல்ல.
Rate this:
Cancel
K.P SARATHI - chennai,இந்தியா
29-ஜூன்-202212:07:14 IST Report Abuse
K.P  SARATHI இந்தியா மண்ணை நேசிக்கும் இஸ்லாமியர்கள் இருக்கிறார்களா இல்லையா, இவர்களுடைய பலமே ஒட்டு உரிமை
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
29-ஜூன்-202211:42:58 IST Report Abuse
raja அமைதி மார்க்கத்தை புகழ்ந்து பேசும் குருமாவை கண்டால் இந்துக்கள் அடித்து துரத்தவேண்டும்...கர்நாடக இந்துக்கள் போல் தமிழ் இந்துக்களும் மாறவேண்டும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X