கடும் வீழ்ச்சியில் ரூபாய் மதிப்பு: ஒரு டாலருக்கு ரூ.79 தர வேண்டும்

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
கச்சா எண்ணெய் உச்ச நிலையில் நீடிப்பது நீண்டகால பணவீக்கம் பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளதால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இன்று (ஜூன் 28) ரூ.79 என்ற புதிய வீழ்ச்சியை கண்டது. ஆர்.பி.ஐ., வங்கி மூலம் டாலர் விற்பனையை தொடங்கி இழப்புகளை கட்டுப்படுத்தி வருகிறது.ஏன் ரூபாய் மதிப்பு சரிகிறது? கடந்த நான்கு நாட்களாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை
Dinamalar_Business_Page, USDvsINR, Rupee, Dollar, Rupeefalling, ரூபாய் மதிப்பு, அமெரிக்க டாலர்

கச்சா எண்ணெய் உச்ச நிலையில் நீடிப்பது நீண்டகால பணவீக்கம் பற்றிய கவலையை ஏற்படுத்தியுள்ளதால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இன்று (ஜூன் 28) ரூ.79 என்ற புதிய வீழ்ச்சியை கண்டது. ஆர்.பி.ஐ., வங்கி மூலம் டாலர் விற்பனையை தொடங்கி இழப்புகளை கட்டுப்படுத்தி வருகிறது.


ஏன் ரூபாய் மதிப்பு சரிகிறது?



latest tamil news



கடந்த நான்கு நாட்களாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இன்று ரூபாய் மதிப்பு புதிய வீழ்ச்சியாக டாலருக்கு எதிராக ரூ.79ஐ தொட்டுள்ளது. அமெரிக்க டாலர் வலுப்பெற்று வருவது ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணம். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டு உச்சத்தை தொட்டுள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் நீடிப்பது, அந்நிய செலாவணி இருப்பு குறைப்பு, குறைவான பார்வேடு ப்ரீமியம் போன்றவையும் ரூபாய் மதிப்பு சரிவடைய காரணம்.இந்திய ரூபாய் மட்டுமல்லாமல் யூரோ, யென் உள்ளிட்ட பிற முக்கிய பணங்களின் மதிப்பும் டாலருக்கு எதிராக வலு இழந்துள்ளது.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதியை நம்பி உள்ளது. நாம் ரஷ்யாவிடம் தற்போது எண்ணெய் வாங்கினாலும் அது குறைந்த அளவே ஆகும். எண்ணெய் வர்த்தகத்தின் பெரும்பகுதி டாலரில் தான் நடக்கிறது. டாலர் வலுப்பெறும் போது நாம் அதிக ரூபாய் செலவிட வேண்டி இருக்கும். மேலும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்குமான இடைவெளி தான் நடப்பு கணக்கு பற்றாக்குறை எனப்படுகிறது. இது அதிகமாகும். இதனால் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பணவீக்கத்தை மேலும் மோசமாக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.


ஆர்.பி.ஐ.,யின் நடவடிக்கை என்ன?



latest tamil news



ரூபாய் வலுவிழக்காமல் இருக்க அந்நிய செலாவணி சந்தையில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து தலையிடும். வங்கிகள் மூலம் டாலர் விற்பனையில் ஈடுபடுகிறது. இது அந்நிய செலாவணி கையிருப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது. டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பணமும் வலுவிழந்து வருவதால், ரூபாயின் மதிப்பும் படிப்படியாக குறைய ரிசர்வ் வங்கி அனுமதிக்கும். அமெரிக்க - இந்திய வட்டி விகித வேறுபாடு ஒரே அளவில் பராமரிக்கப்படும். இது ரூபாய் மதிப்பு மேலும் வலுவிழப்பதைத் தடுக்கும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaswami Sampath - mumbai,இந்தியா
30-ஜூன்-202206:44:44 IST Report Abuse
Ramaswami Sampath தாமரையின் ஆட்சி தொடருமானால் பெட்ரோல் விலையை போல டாலருக்கு நூறு ரூபாய் தரும் காலம் சீக்கிரம் வரும்.பொருளாதாரம் பண வீக்கம் போன்றவற்றை பற்றி கவலை இல்லாத அரசாங்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X