ரோடு சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்!நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எச்சரிக்கை

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
வால்பாறை;எஸ்டேட் ரோடுகளை சீரமைக்காவிட்டால், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை,' என, வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் பாலு, பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.கூட்டத்தில்
ரோடு சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டம்!நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எச்சரிக்கை

வால்பாறை;எஸ்டேட் ரோடுகளை சீரமைக்காவிட்டால், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை,' என, வால்பாறை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.வால்பாறை நகராட்சி கூட்டம் தலைவர் அழகுசுந்தரவள்ளி தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் பாலு, பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:மணிகண்டன் (அ.தி.மு.க.,), பால்சாமி (தி.மு.க.,):முடீஸ் ரோடு சீரமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரோட்டை சீரமைக்காவிட்டால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.அன்பரசன், ராஜேஸ்வரி: வெள்ளமலை எஸ்டேட் செல்லும் ரோடும் சீரமைக்கப்படாமல் உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில், ரோடு பஞ்சராகி உள்ளது.உமாமகேஸ்வரி: சின்கோனா அடுத்துள்ள உபாசி செல்லும் ரோடு, சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. நகராட்சி சார்பில் ஜல்லிக்கற்கள் மட்டும் குவித்து, அப்படியே விட்டு விட்டனர்.சத்தியவாணிமுத்து: உருளிக்கல் எஸ்டேட் பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செல்லும் ரோடும், எஸ்டேட் மருத்துவமனைக்கு செல்லும் ரோடும், சீரமைக்க வேண்டும்.இந்துமதி: ேஷக்கல்முடி ரோட்டில் போக்குவரத்து அதிகமுள்ள நிலையில், ரோடு மோசமாக உள்ளதால், மக்கள் நலன் கருதி உடனடியாக சீரமைக்க வேண்டும்.கமிஷனர்: முடீஸ் ரோடு, 14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் சீரமைக்கப்படும். பிற எஸ்டேட் ரோடுகள் சீரமைப்பதற்கு, எஸ்டேட் நிர்வாகத்திடம் தடையின்மை சான்றிதழ் பெற்ற பின் ரோடு பணி செய்யப்படும்.கனகமணி: கவர்க்கல் துவக்கப்பள்ளியில் காஸ் இணைப்பு வழங்காததால், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சமைப்பதில், தாமதம் ஏற்படுகிறது.வீரமணி: மக்கள் அன்றாட நாட்டு நடப்பை அறிந்து கொள்ளவும், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளிலும் மனமகிழ் மன்றங்களுக்கு, நாளிதழ்கள் வழங்க வேண்டும்.மகுடீஸ்வரன், உமாமகேஸ்வரி: வால்பாறை நகரில் அண்ணாநகர், கக்கன்காலனி உள்ளிட்ட இடங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
ரவிசந்திரன்: கட்டி முடிக்கப்பட்ட படகு இல்லம், தாவரவியல் பூங்காவை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விட வேண்டும். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட இந்த திட்டப்பணிகளை சுற்றுலா பயணியர் நலன் கருதி திறக்க வேண்டும்.கமிஷனர்: படகு இல்லம், தாவரவியல் பூங்கா பணி இன்னும் முழுமையாக நிறைவடைய வில்லை. பணி நிறைவடைந்த பின் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, உடனடியாக திறக்கப்படும்.இவ்வாறு, கூட்டத்தில் விவாதம் நடந்தது. கூட்டத்தில், மொத்தம், 108 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இதில் ஒரே ஒரு தீர்மானம் மட்டும் ரத்து செய்யபட்ட நிலையில், 107 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

இருக்கை பிரச்னை!

கூட்டம் துவங்கியதும், தி.மு.க., கவுன்சிலர்கள் உமாமகேஸ்வரி, மாரியம்மாள் ஆகியோர் மன்றக் கூட்டத்தில் இருக்கையில் அமராமல், வார்டு வரிசை படி 'சீட்' ஒதுக்க வேண்டும் எனக்கூறி, தலைவர் மற்றும் கமிஷனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.'வரிசைப்படி 'சீட்' ஒதுக்காவிட்டால் தரையில் அமருவேன்,' என கூறி, பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர்ந்தார். அவரை சமாதானப்படுத்திய நகராட்சி அதிகாரிகள், வார்டு வரிசைப்படி கவுன்சிலர்களுக்கு 'சீட்' ஒதுக்கினர். அதன்பின் கூட்டம் நடந்தது.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X