ஏரி மதகு ஓட்டையால் வீணாக வெளியேறும் தண்ணீர்

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
உத்திரமேரூர்:காட்டாங்குளம் ஏரியில், மதகு பகுதியில் ஏற்பட்டுள்ள ஓட்டையால், கடந்த ஓராண்டாக தண்ணீர் வீணாக வெளியேறி வருவதாக அப்பகுதி விவசாயிகள் புலம்புகின்றனர்.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டாங்குளம் கிராமம். இக்கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 160 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.இந்த ஏரி நீரைக்கொண்டு, அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பிலான
ஏரி மதகு ஓட்டையால் வீணாக வெளியேறும் தண்ணீர்

உத்திரமேரூர்:காட்டாங்குளம் ஏரியில், மதகு பகுதியில் ஏற்பட்டுள்ள ஓட்டையால், கடந்த ஓராண்டாக தண்ணீர் வீணாக வெளியேறி வருவதாக அப்பகுதி விவசாயிகள் புலம்புகின்றனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது காட்டாங்குளம் கிராமம். இக்கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 160 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது.இந்த ஏரி நீரைக்கொண்டு, அப்பகுதியில் உள்ள 300 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இந்நிலையில், இந்த ஏரிக்கான 3 மதகுகளில், நடு மதகுப் பகுதி கடந்த ஆண்டு ஓட்டை ஏற்பட்டது.
அப்போது, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுப்பணித் துறையினர் இணைந்து, ஓட்டை ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் கட்டி போட்டனர். எனினும், ஏரி தண்ணீர் வெளியேறுவதை முழுவதுமாக தடுக்க இயலவில்லை. தற்போது, நவரை பருவ சாகுபடி பணிகள் முடிந்துள்ள நிலையில், இப்பகுதி விவசாயிகள் சொர்ணவாரி பட்டத்திற்கான சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால், மூடி வைத்துள்ள நடு மதகு பகுதியில் இருந்து, தொடர்ந்து ஏரி நீர் வெளியேறுவதால், சாகுபடி செய்கின்ற பயிர்களுக்கு, பானசம் கிடைக்குமா என்ற சந்தேகத்தில் கவலையடைந்துள்ளனர்
இதுகுறித்து, அப்பகுதி விவசாயி ஒருவர் கூறியதாவது:ஏரி மதகு ஓட்டை ஏற்பட்டுள்ளது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோரிடத்தில் பல முறை மனுக்கள் அளித்துள்ளோம். ஆனால், இதுவரை ஏரி மதகு சீரமைப்பது குறித்து எந்த நடவடிக்கையும் இல்லை. வீணாக வெளியேறும் தண்ணீர், ஏரியில் தேக்கமாக இருந்தால், தற்போது சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கான பாசனத்திற்கு சிக்கல் இருந்திருக்காது.
காட்டாங்குளம் ஏரிக்கான நடு மதகு ஓட்டையால், இப்பகுதி ஏரி பாசன விவசாயம் கேள்விக்குறியாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.உத்திரமேரூர் பொதுப்பணித்துறை ஏரி பாசன பிரிவு, உதவி செயற் பொறியாளர் ஜான் கூறியதாவது:காட்டாங்குளம் ஏரி மதகு ஓட்டையாகி இருப்பது குறித்து, உயர்மட்ட பொதுப்பணித் துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். நிதி ஒதுக்கீடு செய்த பின், மதகு சீரமைப்பு பணி துவங்கப்பட்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X