விரைவான மகசூலுக்கு மஹாராஷ்டிரா 'அத்தி'

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
அத்தி செடிகள் சாகுபடி குறித்து, கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி வி.என்.ராமமூர்த்தி கூறியதாவது:எனக்கு சொந்தமான செங்கட்டு மண் நிலத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, அத்தி செடிகளை வாங்கி வந்து, சாகுபடி செய்துள்ளேன். இது, ஓராண்டுக்கு பின் மகசூல் வரும் என கூறினர். பிற, ஒட்டு ரகம் மற்றும் விதை
விரைவான மகசூலுக்கு மஹாராஷ்டிரா 'அத்தி'

அத்தி செடிகள் சாகுபடி குறித்து, கடம்பத்துார் ஒன்றியம் புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயி வி.என்.ராமமூர்த்தி கூறியதாவது:

எனக்கு சொந்தமான செங்கட்டு மண் நிலத்தில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, அத்தி செடிகளை வாங்கி வந்து, சாகுபடி செய்துள்ளேன். இது, ஓராண்டுக்கு பின் மகசூல் வரும் என கூறினர். பிற, ஒட்டு ரகம் மற்றும் விதை பதியம் போட்ட செடிகளுக்கு, இது பொருந்தும்.விண் பதியத்தில் போடப்பட்ட செடிகளை சாகுபடி செய்யும் போது, சற்று வித்தியாசமாக உள்ளது. ஆறு மாதங்களில், அத்தி செடிகளில் காய் மகசூல் வந்துவிடுகிறது.
விண் பதிய முறையில் அத்தி சாகுபடி செய்யும்போது, செடிகள் வளர்த்தியாக இருந்தால், முதலில் காய்க்கும் காய்களை கிள்ளி எரியத்தேவையில்லை. அதை அப்படியே அறுவடைக்காக, செடிகளில் விட்டு வைக்கலாம்.பிற ரக அத்தி செடிகளைவிட, மஹாராஷ்டிரா அத்தி செடிகளில், மகசூல் மற்றும் பராமரிப்புகள்எளிதாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:வி.என்.ராமமூர்த்தி 94446 10236


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X