இந்தியாவின் பழம்பெரும் தொழிலதிபர்பலோன்ஜி மிஸ்ட்ரி காலமானார்

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
புதுடில்லி:இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான, 'ஷபூர்ஜி பலோன்ஜி' குழுமத்தின் தலைவர் பலோன்ஜி மிஸ்ட்ரி, தன்னுடைய 93வது வயதில்,காலமானார்.'டாடா சன்ஸ்' நிறுவனத்தில் 18.4 சதவீத பங்குகளுடன், தனிப்பெரும் பங்குதாரராக, மிஸ்ட்ரி குடும்பம் உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு பொறியியல், கட்டுமானம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், தண்ணீர், எரிபொருள், நிதிசேவை என பல
இந்தியாவின் பழம்பெரும் தொழிலதிபர்பலோன்ஜி மிஸ்ட்ரி காலமானார்

புதுடில்லி:இந்தியாவின் முன்னணி தொழில் நிறுவனங்களில் ஒன்றான, 'ஷபூர்ஜி பலோன்ஜி' குழுமத்தின் தலைவர் பலோன்ஜி மிஸ்ட்ரி, தன்னுடைய 93வது வயதில்,காலமானார்.
'டாடா சன்ஸ்' நிறுவனத்தில் 18.4 சதவீத பங்குகளுடன், தனிப்பெரும் பங்குதாரராக, மிஸ்ட்ரி குடும்பம் உள்ளது. மும்பையை தலைமையிடமாக கொண்டு பொறியியல், கட்டுமானம், உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட், தண்ணீர், எரிபொருள், நிதிசேவை என பல துறைகளில் இயங்கி வருகிறது, ஷபூர்ஜி பலோன்ஜி நிறுவனம்.
இந்நிறுவனம் 1865ல் துவங்கப்பட்டது. மிஸ்ட்ரி இந்நிறுவனத்தில் 1947ல் சேர்ந்தார்.இவரது வருகைக்கு பின், இந்நிறுவனம் பெரும் அளவில் விரிவாக்கத்தை கண்டது. மத்திய கிழக்கு நாடுகள், அபுதாபி, கத்தார், துபாய் என பல நாடுகளில் வணிகம் விரிந்தது. ஓமன் நாட்டு சுல்தானின் அரண்மனையை கட்டும் வாய்ப்பை 1970ல் இந்நிறுவனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் பார்சி குடும்பத்தில் பிறந்த மிஸ்ட்ரி, 2003ல் திருமணத்தின் வாயிலாக, ஐரிஷ் குடியுரிமை பெற்றவரானார்.இவரது மூத்த மகன் ஷபூர்ஜி மிஸ்ட்ரி, 'ஷபூர்ஜி பலோன்ஜி அண்டு கம்பெனி' நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.இவரது இளைய மகனான சைரஸ் மிஸ்ட்ரி, 'டாடா சன்ஸ்' நிறுவனத்தின் தலைவராக, 2012ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
'புளூம்பெர்க் பில்லியனர்ஸ்' குறியீட்டின் படி, மிஸ்ட்ரி, உலகின் 41வது பெரிய பணக்காரர் ஆவார். இவரது நிகர சொத்து மதிப்பு 2.28 லட்சம் கோடி ரூபாய்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X