டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (2) | |
பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள்சரளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிகள்மற்றும் கல்லுாரி வாசல்களில் போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இதைக் கட்டுப்படுத்த வேண்டும்; போதைப் பொருள் விற்பனையை தடை செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.டவுட் தனபாலு: ஊழல் குற்றச்சாட்டு, 'லாக்கப்' மரணம், கொலை,

'டவுட்' தனபாலு

பா.ம.க., தலைவர் அன்புமணி: தமிழகத்தில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள்சரளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிகள்மற்றும் கல்லுாரி வாசல்களில் போதை பொருள் விற்பனை அதிகரித்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் உடனடியாக இதைக் கட்டுப்படுத்த வேண்டும்; போதைப் பொருள் விற்பனையை தடை செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்.

டவுட் தனபாலு: ஊழல் குற்றச்சாட்டு, 'லாக்கப்' மரணம், கொலை, கொள்ளை, போதை பொருட்கள் விற்பனை என, இந்த ஆட்சியிலும் எல்லாமே நடக்குது... இதுக்கு பேரு தான், 'விடியல்' ஆட்சியான்னு மக்களுக்கு, 'டவுட்' வந்துடுச்சு!

தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி: மூத்த முன்னோடிகள் இல்லாமல், தி.மு.க., கிடையாது. தி.மு.க., கூட்டணியின் வெற்றியில், மூத்த முன்னோடிகள் ஒவ்வொருவரின் உழைப்பும் உள்ளது. எனக்கு ராசியில் நம்பிக்கையில்லை; உழைப்பில் தான் நம்பிக்கை உண்டு.

டவுட் தனபாலு: கருணாநிதி காலத்தில் இருந்து ஸ்டாலின் காலம் வரை, தி.மு.க.,வின் அடிமட்ட தொண்டர்கள் உழைத்துக் கொண்டே தான் இருக்கின்றனர்...ஆனால், உயர்வது என்னவோ, கோபாலபுரம் குடும்பம் மட்டும்தான் என்பதில், தமிழகமக்களுக்கே, 'டவுட்' இல்லை!


தமிழக காங்., விவசாய அணி மாநில செயலர் ஆர்.எஸ்.ராஜன்:
'முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான, சிறையில் இருக்கும் நளினியை விடுதலை செய்வதை நாங்கள்எதிர்க்கவில்லை' என, தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதை, ராஜிவ் மீது பற்றுள்ள யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ராஜிவ் படுகொலையை, தமிழக மக்கள் மறக்கவும் இல்லை; மன்னிக்கவும் இல்லை. கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர் பதவிக்கே லாயக்கு அற்றவர் என்பது, இதன் வாயிலாகநிரூபணமாகிறது.

டவுட் தனபாலு: தி.மு.க.,வின் செயல்பாடுகளுக்கு தலையாட்டுறது மட்டும் தான், தமிழக காங்., தலைவர் பதவிக்கான பணி என்பது தீர்மானிக்கப்பட்ட ஒன்று... 'ராஜிவ் கொலை, கட்சி கொள்கை' இதெல்லாம் அவசியமில்லாதது என, காங்., தலைமை நினைக்கிறது என்பதில், 'டவுட்'டே இல்லை!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X