பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ்மேலும் 15 நிறுவனங்கள் தேர்வு

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
புதுடில்லி:வீட்டு உபயோகப் பொருட்கள் துறைக்கான, 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை' திட்டத்தின் கீழ், பயனாளிகளாக, மேலும் 15 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.'அதானி காப்பர் டியூப்ஸ், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ், விப்ரோ எண்டர்பிரைசஸ்' உள்ளிட்ட 15 நிறுவனங்கள், பி.எல்.ஐ., எனும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 1,368 கோடி
பி.எல்.ஐ., திட்டத்தின் கீழ்மேலும் 15 நிறுவனங்கள் தேர்வு

புதுடில்லி:வீட்டு உபயோகப் பொருட்கள் துறைக்கான, 'உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை' திட்டத்தின் கீழ், பயனாளிகளாக, மேலும் 15 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக, அரசு அறிவித்துள்ளது.
'அதானி காப்பர் டியூப்ஸ், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ், விப்ரோ எண்டர்பிரைசஸ்' உள்ளிட்ட 15 நிறுவனங்கள், பி.எல்.ஐ., எனும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 1,368 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இத்துறையில், கடந்த ஆண்டு நவம்பரில் 'டெய்கின், பானாசோனிக், சிஸ்கா, ஹேவல்ஸ்' உள்ளிட்ட 42 நிறுவனங்கள், இத்திட்டத்தின் கீழ் உற்பத்தியை துவங்க முன்வந்து உள்ளன. இந்நிறுவனங்கள் 4,614 கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளன.

இம்முறை, மொத்தம் 19 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் தொழில் துவங்க விண்ணப்பித்திருந்த நிலையில், பரிசீலனைக்கு பின், 15 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக அரசு அறிவித்து உள்ளது. இதில், ஆறு நிறுவனங்கள் 'ஏசி' இயந்திரங்களை தயாரிக்கவும்; ஒன்பது நிறுவனங்கள் எல்.இ.டி., விளக்குகள் தயாரிக்கவும் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X