விலையை உயர்த்துகிறது 'டாடா மோட்டார்ஸ்'

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
புதுடில்லி:'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் வர்த்தக வாகனங்களின் விலையை, ஜூலை முதல் உயர்த்த உள்ளது.டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் வர்த்தக வாகனங்களின் விலையை, ஜூலை முதல் தேதியிலிருந்து, 1.5 சதவீதத்திலிருந்து, 2.5 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு விகிதம், வாகனத்தை பொறுத்து வேறுபடும் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, டாடா மோட்டார்ஸ்
விலையை உயர்த்துகிறது 'டாடா மோட்டார்ஸ்'

புதுடில்லி:'டாடா மோட்டார்ஸ்' நிறுவனம், அதன் வர்த்தக வாகனங்களின் விலையை, ஜூலை முதல் உயர்த்த உள்ளது.டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அதன் வர்த்தக வாகனங்களின் விலையை, ஜூலை முதல் தேதியிலிருந்து, 1.5 சதவீதத்திலிருந்து, 2.5 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விலை உயர்வு விகிதம், வாகனத்தை பொறுத்து வேறுபடும் என்றும் தெரிவித்துள்ளது.இது குறித்து, டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளதாவது:உள்ளீட்டு விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை சமாளிக்க, தயாரிப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இருப்பினும், விலை அதிகமாக உயர்ந்ததை அடுத்து, அதன் ஒரு பகுதியை நுகர்வோரிடமிருந்து பெற்று சமன் செய்யும் வகையில், இந்த விலை உயர்வு அமலாகிறது.இவ்வாறு தெரிவிக்கப் பட்டு உள்ளது.டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஏப்ரலில் 2-2.5 சதவீதம் அளவுக்கு, வர்த்தக வாகனங்களின் விலையை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X