சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து பதறும் நடிகர்கள்!

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து பதறும் நடிகர்கள்!''எல்லாம் பணம் செஞ்ச வித்தையாம் வே...'' என்றபடியே பெஞ்சில் வந்தமர்ந்தார், அண்ணாச்சி.''இப்படி மொட்டையா சொன்னீங்கன்னா எப்படீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''ராணிப்பேட்டை அனந்தலை பகுதியில கழிவு நீர் கால்வாய் கட்ட, 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, 2015ல அரசு உத்தரவுபோட்டுச்சு வே...''அந்த திட்டத்துல ஏதோ

டீக்கடை பெஞ்ச்...


தயாரிப்பு நிறுவனத்தை பார்த்து பதறும் நடிகர்கள்!''எல்லாம் பணம் செஞ்ச வித்தையாம் வே...'' என்றபடியே பெஞ்சில் வந்தமர்ந்தார், அண்ணாச்சி.

''இப்படி மொட்டையா சொன்னீங்கன்னா எப்படீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ராணிப்பேட்டை அனந்தலை பகுதியில கழிவு நீர் கால்வாய் கட்ட, 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி, 2015ல அரசு உத்தரவுபோட்டுச்சு வே...

''அந்த திட்டத்துல ஏதோ பிரச்னைன்னு, சில நாட்கள்லயே அந்த உத்தரவை ரத்துசெஞ்சிட்டாவ... ஒதுக்கப்பட்ட நிதியையும் திரும்பவாங்கிட்டாவ வே...

''ஆனா, ஊராட்சி மன்ற பொது நிதியில இருந்து பணம் செலவழிச்சு, அந்த பணிகளை முடிச்சிட்டாவ... ஊராட்சி தணிக்கையில இந்த விபரம்
தெரிஞ்சிட்டு வே...

''உடனே, அப்ப பொறுப்புல இருந்த, பி.டி.ஓ.,க்கள் ஒன்பது பேரிடம் விளக்கம் கேட்டு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், 'மெமோ' அனுப்பிட்டாரு... ஆனா, சில நாட்கள்ல ஊரக வளர்ச்சித் துறை உயர் அதிகாரிகள் தலையிட்டு, அந்த மெமோவை 'வாபஸ்' வாங்கிட்டாவ... இதுல, பெரிய அளவுல பணம் விளையாடி இருக்கிறதா பேசிக்கிடுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

''ஆட்சி மாறினாலும், இவரை ஒண்ணும் செய்ய முடியாதாம் பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

''காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு பண்டக சாலையின் தலைவரா இருக்கிறவர், அ.தி.மு.க.,வின் கிழக்கு தாம்பரம் பகுதி நிர்வாகியாகவும் இருக்காரு... போன ஆட்சியில, பண்டக சாலையில கோடிக்கணக்குல சுருட்டிட்டதா இவர் மேல புகார் இருக்குது பா...

''ஆட்சி மாறியும், தலைவர் பதவியில நீடிக்காரு... பண்டக சாலையில வேலை பார்க்கிற தி.மு.க., ஆதரவு மேலாளர்களுடன் கூட்டணி போட்டு, மாசா மாசம் கறார் வசூல் செய்றாரு... கட்சியாவது, கொள்கையாவது, காசு தான் முக்கியம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''கூத்தன் வாரும்... காபி சாப்பிடலாம்...'' என நண்பரை வரவேற்ற குப்பண்ணாவே, ''அந்த பட நிறுவனத்தோட பெயரைச் சொன்னாலே, உச்ச நடிகர்கள் பயப்படறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.

''ஏதும் கோர்ட், பணப் பிரச்னை விஷயமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''இது, அதுக்கும் மேல... 'சூப்பரா' நடிக்கறவரின் படங்களை தொடர்ச்சியா தயாரிச்சுட்டு வர்ற நிறுவனம், ஒவ்வொரு படத்தையும் நஷ்டம்னு சொல்லி சொல்லியே, அவரை வச்சு அடுத்தடுத்த படங்களை, 'கமிட்' பண்ணிக்கறது ஓய்...

''அந்த நடிகரும், வேற வழியில்லாம, 'கால்ஷீட்' குடுத்துண்டு இருக்கார்... அந்த நிறுவனம், சமீபத்துல பெரிய ஸ்டார் நடிகர்களை வச்சு தயாரிச்ச இரண்டு படங்களும், படுதோல்வி
அடைஞ்சுடுத்து ஓய்...

''ஆளுங்கட்சியின் பெயரைச் சொல்லி, பெரிய நடிகர்களிடம் கால்ஷீட் வாங்கினாலும், எந்த படமும் ஓடறது இல்லை... இந்த சூழல்ல, அடுத்த படத்துக்கு, 'தல' நடிகரை பிடிச்சு போட
போறாளாம் ஓய்...

''இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கறதுன்னு தெரியாம, பிரபல நடிகர்கள் தலையை பிய்ச்சுண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''தினமும் உடம்புல, 'சன்லைட்' பட்டா நல்லதுன்னு டாக்டர்கள் சொல்லுதாவளே... அது நிஜம்தானா வே...'' என, அண்ணாச்சி கேட்க, அரட்டை திசைமாறியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஜூன்-202220:26:55 IST Report Abuse
சின்னாளம்பட்டி சின்னவர் அந்த குடும்பம் இனி தமிழகத்தை இடி அமீன் போல விழுங்குவதை தடுக்கவே முடியாதா , விளக்கினை தேடி அலையும் வீட்டில் பூச்சிகளாக தமிழர்கள் மாறி போனதில் மிக பெரிய வருத்தம் எனக்குண்டு
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஜூன்-202214:40:32 IST Report Abuse
r.sundaram ஒருகாலத்தில் பைசா பைசா என்று எல்லோரும் சன் லைட் பக்கம் போனார்கள், இன்று எப்படி தப்புவது என்று தெரியாமல் முழிக்கிறார்கள். ஆழம் அறியாமல் காலை விட்டதனால் வந்த வரவு இது.
Rate this:
Cancel
ramesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-ஜூன்-202213:45:39 IST Report Abuse
ramesh என்னவொய் வீடியோ எடுத்து விடவா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X