'ருச்சி சோயா' நிறுவனத்தின் பெயரை மாற்றியது 'பதஞ்சலி'

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
புதுடில்லி:சமையல் எண்ணெய் நிறுவனமான 'ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்'24ம் தேதி முதல், 'பதஞ்சலி புட்ஸ்' நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.கடந்த 2019ல், பாபா ராம்தேவ் தலைமையிலான, 'பதஞ்சலி ஆயுர்வேத' நிறுவனம், திவால் நடவடிக்கைக்கு உள்ளான ருச்சி சோயாவை, 4,350 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இந்நிலையில், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் எனும் பெயரை, பதஞ்சலி
 'ருச்சி சோயா' நிறுவனத்தின் பெயரை மாற்றியது 'பதஞ்சலி'

புதுடில்லி:சமையல் எண்ணெய் நிறுவனமான 'ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ்'24ம் தேதி முதல், 'பதஞ்சலி புட்ஸ்' நிறுவனம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2019ல், பாபா ராம்தேவ் தலைமையிலான, 'பதஞ்சலி ஆயுர்வேத' நிறுவனம், திவால் நடவடிக்கைக்கு உள்ளான ருச்சி சோயாவை, 4,350 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இந்நிலையில், ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் எனும் பெயரை, பதஞ்சலி புட்ஸ் என மாற்றம் செய்ய கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தது, பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம்.
தற்போது அனுமதி கிடைத்துள்ளதை அடுத்து, கடந்த 24ம் தேதி முதல் பெயர் மாற்றம் செய்யப் பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.பதஞ்சலி நிறுவனம், உணவு வணிகத்தை தனியாக பிரிக்க முடிவு செய்ததை அடுத்து, அதன் உணவு சில்லரை வணிகத்தை, ருச்சி சோயா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு, கடந்த மாதம் 690 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.ருச்சி சோயா, அண்மையில் தொடர்பங்கு வெளியீட்டின் வாயிலாக, 4,300 கோடி ரூபாயை திரட்டியது குறிப்பிடத்தக்கது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X