இதே நாளில் அன்று

Added : ஜூன் 28, 2022 | |
Advertisement
ஜூன் 29, 1925நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்,சுப்பிரமணியன் -- ராஜலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1925ல் இதே நாளில் பிறந்தவர் லட்சுமி நரசிம்மன். கல்லுாரி நாடகத்தில், 'மனோகர்' பாத்திரத்தில் நடித்ததால், ஆர்.எஸ்.மனோகரானார்.இவரது தந்தை, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில், தபால் துறையில் பணியாற்றியதால், குடும்பம் அங்கு சென்றது. பள்ளிப் பருவ மனோகர், அங்கு ஷேக்ஸ்பியர் நாடகங்களை

இதே நாளில் அன்று


ஜூன் 29, 1925



நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்,சுப்பிரமணியன் -- ராஜலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1925ல் இதே நாளில் பிறந்தவர் லட்சுமி நரசிம்மன். கல்லுாரி நாடகத்தில், 'மனோகர்' பாத்திரத்தில் நடித்ததால், ஆர்.எஸ்.மனோகரானார்.இவரது தந்தை, கர்நாடகா மாநிலம் பெல்லாரியில், தபால் துறையில் பணியாற்றியதால், குடும்பம் அங்கு சென்றது. பள்ளிப் பருவ மனோகர், அங்கு ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்திய நடிகர் ராகவாச்சாரி நடிப்பாலும், உச்சரிப்பாலும் ஈர்க்கப்பட்டார். பின், சென்னை பச்சையப்பன் கல்லுாரியில், 'மிருச்சக்கடிகா' என்ற, சமஸ்கிருத நாடகத்தில் நடித்து புகழ் பெற்றார்; தொடர்ந்து நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தார். இவரின், 'தோட்டக்காரன்' நாடகத்தை பம்மல் சம்பந்தம் பாராட்டினார்.இவரின், 'இலங்கேஸ்வரன்' என்ற, ராவண நாடகம் இலங்கையில் பலமுறை அரங்கேறியது. இவரின், 'சூரபத்மன், சாணக்கிய சபதம், சிசுபாலன், இந்திரஜித், சுக்ராச்சாரியார்' உள்ளிட்ட நாடகங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.நாடகங்கள் மட்டுமின்றி, வண்ணக்கிளி, வல்லனுக்கு வல்லவன், அடிமைப்பெண், இதயக்கனி உட்பட, 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்தார். ஆர்.எஸ்.மனோகர், 2006 ஜனவரி 10ல், தன், 81வது வயதில் மரணித்தார்.
நாடகக் காவலரின் பிறந்த தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X