பங்கு வெளியீட்டுக்கு வரும் பிரபல மதுபான நிறுவனம்

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி:'ஆபீசர்ஸ் சாய்ஸ் விஸ்கி' தயாரிப்பு நிறுவனமான, 'அலைடு பிளண்டர்ஸ் அண்டு டிஸ்டில்லர்ஸ்' நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர விண்ணப்பித்துள்ளது.பிரபல மதுபான பிராண்டுகள் பலவற்றை தயாரித்து வரும் அலைடு பிளண்டர்ஸ், 2 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இதையடுத்து, புதிய பங்கு வெளியீட்டுக்கு
பங்கு வெளியீட்டுக்கு வரும் பிரபல மதுபான நிறுவனம்

புதுடில்லி:'ஆபீசர்ஸ் சாய்ஸ் விஸ்கி' தயாரிப்பு நிறுவனமான, 'அலைடு பிளண்டர்ஸ் அண்டு டிஸ்டில்லர்ஸ்' நிறுவனம், 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டும் பொருட்டு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வர விண்ணப்பித்துள்ளது.
பிரபல மதுபான பிராண்டுகள் பலவற்றை தயாரித்து வரும் அலைடு பிளண்டர்ஸ், 2 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.இதையடுத்து, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான 'செபி'க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்த புதிய பங்கு வெளியீட்டின் போது, ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதியை கொண்டு, கடன்களை அடைக்கவும்; பொதுவான நிர்வாகச் செலவுகளுக்கு பயன்படுத்தவும் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந் நிறுவனம் மொத்தம் 10 பிராண்டு பெயர்களில், பல்வேறு வகையான மதுபானங்களை தயாரித்து வருகிறது.இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது வகை சந்தையில், இந்நிறுவனம் 8.2 சதவீத பங்களிப்புடன் உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
29-ஜூன்-202214:42:02 IST Report Abuse
Vivekanandan Mahalingam இப்போ ஷேர் மார்க்கெட் இருக்கும் நிலையில் - இது தேவையா
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
29-ஜூன்-202207:35:28 IST Report Abuse
Muraleedharan.M இனி IPO வேண்டாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X