'ரிலையன்ஸ் ஜியோ'விலிருந்து முகேஷ் அம்பானி விலகல்

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி:'ரிலையன்ஸ்' குழுமத்தின் தொலை தொடர்பு துணை நிறுவனமான 'ரிலையன்ஸ் ஜியோ'வின் நிர்வாகக் குழுவிலிருந்து முகேஷ் அம்பானி விலகி உள்ளார். இதன் தொடர்ச்சியாக, முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, அந்நிறுவனத்தின் தலைவராக உயர்ந்து உள்ளார்.கடந்த 27ம் தேதியன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில், செயல் சாரா இயக்குனராக இருக்கும் ஆகாஷ் அம்பானி, நிர்வாக குழு
'ரிலையன்ஸ் ஜியோ'விலிருந்து முகேஷ் அம்பானி விலகல்

புதுடில்லி:'ரிலையன்ஸ்' குழுமத்தின் தொலை தொடர்பு துணை நிறுவனமான 'ரிலையன்ஸ் ஜியோ'வின் நிர்வாகக் குழுவிலிருந்து முகேஷ் அம்பானி விலகி உள்ளார். இதன் தொடர்ச்சியாக, முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, அந்நிறுவனத்தின் தலைவராக உயர்ந்து உள்ளார்.
கடந்த 27ம் தேதியன்று நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில், செயல் சாரா இயக்குனராக இருக்கும் ஆகாஷ் அம்பானி, நிர்வாக குழு தலைவராக பொறுப்பேற்கவும், முகேஷ் அம்பானி இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகவும் அனுமதி வழங்கப்பட்டுஉள்ளது.டிஜிட்டல் சேவைகள் பிரிவில் ஆகாஷ் அம்பானியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக, இந்த அங்கீகாரம் அவருக்கு வழங்கப்பட்டு உள்ளது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் 2ஜி இணைப்பிலிருந்து 4ஜி இணைப்புக்கு மாறுவதற்கு உதவியாக, 'ஜியோபோனை' தயாரித்து அறிமுகம் செய்ததில், ஆகாஷ் முக்கிய பங்காற்றி உள்ளார். முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவன இயக்குனர் பொறுப்பிலிருந்து விலகியபோதும், அவர் 'ஜியோ பிளாட்பார்ம்ஸ்' நிறுவனத்தின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.முகேஷ் அம்பானியின் வாரிசு திட்டத்தின் ஒரு பகுதி தான் இது என்கிறார்கள் சந்தை நோக்கர்கள்.

65 வயதாகும் முகேஷ் அம்பானிக்கு, மொத்தம் மூன்று குழந்தைகள். இதில், ஆகாஷ் மற்றும் இஷா இரட்டையர்கள். இளைய மகன் பெயர் ஆனந்த். ரிலையன்ஸ் சாம்ராஜ்யத்தை, எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ், சில்லரை வணிகம், டிஜிட்டல் சேவைகள் என மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்.
இவை மூன்றுமே மதிப்பீட்டளவில் கிட்டத்தட்ட சமம் தான். ஆகாஷ் மற்றும் இஷா சில்லரை மற்றும் டிஜிட்டல் பிரிவில் 'ஆக்டிவ்' ஆக உள்ளனர். ஆனந்த் எண்ணெய், புதுப்பிக்கத்தகுந்த எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல் வணிக பிரிவில் இயக்குனராக இருந்து செயல்பட்டு வருகிறார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
29-ஜூன்-202216:03:36 IST Report Abuse
Akash Big deal...he gave it to his children...why all this drama abt encouraging younger generation ? That's the difference between him and Tatas
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X