வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி :மத உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, 'ஆல்ட் நியூஸ்' இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது சுபைர் கைதுக்கு 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது பற்றி, வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:போலி செய்திகளையும், போலி தகவல்களையும் கண்டறிந்து, அதன் உண்மையை மக்களுக்கு தெரிவிப்பதில், கடந்த சில ஆண்டுகளாக ஆல்ட் நியூசும், சுபைரும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
அவர் ஆளுங்கட்சி செய்தித் தொடர்பாளரின் விஷம் கக்கும் பேச்சை அம்பலப்படுத்தினார். அதன் பின்னர்தான் சம்பந்தப்பட்ட கட்சி தனது நடவடிக்கைகளில் சில திருத்தங்களைக் கொண்டு வந்து உள்ளது. அதற்கு காரணமாக இருந்த முகமது ஜுபைரின் கைது கண்டனத்துக்குரியது.
'ஜி7' மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, நாடுகள் வெளிப்படையான பொது விவாதம், சுதந்திரமான ஊடகம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு ஆகியனவற்றை ஊக்குவிப்பேன்' என, அளித்த வாக்குறுதியின்படினா முகமது ஜுபைர் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக முகமது சுபைரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரி டில்லி கீழ் கோர்ட்டில் போலீசார் தாக்கல் செய்த மனுவை ஏற்ற கோர்ட் நான்கு நாள் அனுமதி அளித்தது.