மஹாராஷ்டிரா கவர்னருடன் தேவேந்திர பட்னாவிஸ் சந்திப்பு : பா.ஜ., ஆட்சி அமைக்க முயற்சி ?

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
புதுடில்லி : மஹாராஷ்டிரா கவர்னரை முன்னாள் பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென சந்தித்து பேசியதை தொடர்ந்து அம்மாநில அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.சிவசேனாவுக்கு எதிராக அணி திரண்டுள்ள அதிருப்தியாளர்களை தகுதி நீக்கம் செய்ய, உச்ச நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பதிலளிக்கும்படி, சட்டசபை துணை சபாநாயகர்,
BJP's Devendra Fadnavis reaches Governor's office

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : மஹாராஷ்டிரா கவர்னரை முன்னாள் பா.ஜ., முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென சந்தித்து பேசியதை தொடர்ந்து அம்மாநில அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

சிவசேனாவுக்கு எதிராக அணி திரண்டுள்ள அதிருப்தியாளர்களை தகுதி நீக்கம் செய்ய, உச்ச நீதிமன்றம் ஜூலை 11ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பதிலளிக்கும்படி, சட்டசபை துணை சபாநாயகர், மாநில அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.


latest tamil newsவரும் 11ம் தேதி வரை தடை உள்ளதால், அடுத்து என்ன நடக்குமோ என, மஹாராஷ்டிர அரசியல் கட்சிகள், 'திக் திக்' மனநிலையில் இருக்கும் போது திடீர் திருப்பமாக, மஹாராஷ்டிரா மாநில பா.ஜ., முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை கவர்னர் மாளிகை சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, சட்டசபையி்ல் பெரும்பான்மை நிரூபிக்க ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என கவர்னரை பட்னாவிஸ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. பட்னாவிஸூடன் சில பா.ஜ., எம்.எல்.ஏ.க்களும் சென்றனர்.

முன்னதாக டில்லி சென்றிருந்த தேவேந்திர பட்னாவிஸ், பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து கவர்னரை சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு மேலும் அதிகரித்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
29-ஜூன்-202208:13:21 IST Report Abuse
Venugopal S பாஜகவுக்கும் திமுகவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இது தான்.திமுக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்,பாஜக எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து அவர்களையே விலைக்கு வாங்கி ஆட்சி அமைப்பார்கள். திமுக சில்லறை வியாபாரி,பாஜக மொத்த (ஹோல்சேல்) வியாபாரி. இதில் இரண்டு கட்சிகளும் ஒருவரை ஒருவர் குற்றம் குறை சொல்லி நம்மை முட்டாளாக்குவார்கள்.
Rate this:
Cancel
29-ஜூன்-202207:47:39 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் பெரும்பான்மை இல்லாத நிலையில் பிஜேபி தனித்து ஆட்சி அமைக்க முடியாது.. இன்னொரு கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பதை விட சட்டசபையை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த பிஜேபி கோரலாம் .....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202206:30:54 IST Report Abuse
Kasimani Baskaran ஜான் சேனா என்றோ இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி அவர்களுக்கே ஆப்படித்து விட்டது. இனி புதிதாக செய்ய ஒன்றுமில்லை. ஆகவே காங்கிரஸ் இதை அப்படியே விட்டுவிடும். அவர்களை பொருத்தமட்டில் ஜான் சேனாவும், பவர் கட்சியும் அடுத்த முறை இவ்வளவு இடங்களை பெறக்கூடாது. பாஜகவுக்கு நிரந்தரமாக மஹாராஷ்டிராவை எழுதிவைக்கிறார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X