பாரம்பரிய அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த மேயர்

Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியின் காலில், 'டொபுக்'கென விழுந்து வணங்கிய தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, மாவட்ட வாரியாக தி.மு.க., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்
பாரம்பரிய அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த மேயர்

தி.மு.க., இளைஞரணி செயலரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதியின் காலில், 'டொபுக்'கென விழுந்து வணங்கிய தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்ற பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, மாவட்ட வாரியாக தி.மு.க., சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின் உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு உள்ளது. 'திராவிடத் திருவிழா' என்ற பெயரில் மாவட்டந்தோறும் உதயநிதி சுற்றுப்பயணம் செல்கிறார். கட்சியில் நலிந்த மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, கட்சியின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் உதயநிதி பங்கேற்கிறார்.
சமீபத்தில் டெல்டா மாவட்டத்தில் உதயநிதி சுற்றுப்பயணம் சென்றார். தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலக கட்டட அடிக்கல் நாட்டு விழா, பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் பங்கேற்க, தஞ்சாவூருக்கு சென்ற உதயநிதிக்கு தி.மு.க.,வினர் வரவேற்பு அளித்தனர். அப்போது தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் ராமநாதன், மேயர் அங்கி அணிந்திருந்த நிலையில், திடீரென உதயநிதி காலில் 'டொபுக்'கென விழுந்து வணங்கினார். இந்த வீடியோ பதிவு, சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. \மேயர் பதவி மற்றும் மேயர் நாற்காலி, அங்கி உடை, செங்கோல் போன்றவைக்கு பராரம்பரிய மரியாதையும், மரபும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேயர் அங்கி உடை அணிந்த வண்ணம், உதயநிதி காலில் விழுந்து மேயர் வணங்கியதால், வணக்கத்துக்குரிய மேயரின் மாண்புக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியில், மேயர் காலில் விழும் கலாசாராத்தை ஊக்குவிக்கலாமா; இது தான் சமூக நீதியா; சமத்துவமா என்ற கேள்விகளை, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பலரும் தி.மு.க.,வை வறுத்தெடுக்கின்றனர்.மேலும், மேயர் ராமநாதன் உடனே தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
- நமது நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
30-ஜூன்-202202:18:02 IST Report Abuse
M  Ramachandran பதவிக்கு மரியாதையை கொடுக்காத மூடர் கூட்டம். நகர மேயர் அயல் நாட்டு முக்கியஸ்தர் வந்தாலோலா நம் ஜனாதி பதி இஙகு வநதாலோ மேயர் தான் முன்னின்று வரவேற்க வேண்டும்.முதலைவர்கூட அப்புறம் தான்.அதைய கூட மதிக்க தெரியாத அவசரக்குடுக்கை முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து காலாட்ட வேண்டும் என்ற நப்பாசைய். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கோடையை பிடிப்பான்.
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
29-ஜூன்-202211:27:27 IST Report Abuse
David DS மேயர் அங்கிக்கு தான் மதிப்பா? அப்போ உள்ள இருக்கற ஆளு டம்மி பீசு தானா ?
Rate this:
A P - chennai,இந்தியா
29-ஜூன்-202213:03:56 IST Report Abuse
A Pஅந்தக் காலத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில், மேயரைப் பார்த்து " மாநகர் மேயரவரே " என்று ஒரு அறிவிலி அழைத்தது சிரிப்புக்கும் அதே சமயம் கண்டனத்துக்கும் உரியதாக ஆனது....
Rate this:
Cancel
kumar - nandhivaram,இந்தியா
29-ஜூன்-202207:22:13 IST Report Abuse
kumar தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கு சிந்திச்சி ஓட்டுப் போடுறாங்களோ அன்றைக்கு தான் இந்த சாக்கடை அரசியல்வாதிகளுக்கு அழிவு காலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X