சூட்கேசில் கரன்சி: பினராயி மறுப்பு

Updated : ஜூன் 28, 2022 | Added : ஜூன் 28, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
திருவனந்தபுரம் :'சூட்கேசில் கரன்சி நோட்டுகளை வைத்து துபாய்க்கு எடுத்து செல்லப்பட்டது' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது கூறப்படும் புகாரை அவர் மறுத்துள்ளார்.கேரளாவில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திய வழக்கில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார்.இந்நிலையில்,
சூட்கேஸ், கரன்சி: பினராயி மறுப்பு

திருவனந்தபுரம் :'சூட்கேசில் கரன்சி நோட்டுகளை வைத்து துபாய்க்கு எடுத்து செல்லப்பட்டது' என, கேரள முதல்வர் பினராயி விஜயன் மீது கூறப்படும் புகாரை அவர் மறுத்துள்ளார்.கேரளாவில், 15 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்திய வழக்கில், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்துள்ளார்.இந்நிலையில், ஸ்வப்னா நீதிபதியிடம் தந்த வாக்குமூலத்தில், 'தங்க கடத்தலில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு உள்ளது' என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


latest tamil news




தற்போது, '2016ல் பினராயி விஜயன் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு சென்ற போது, அவர் மறந்து விட்டுச் சென்ற ஒரு சூட்கேஸ், ஒருவர் வாயிலாக துபாய்க்கு கொடுத்தனுப்பப்பட்டது; அதில் ஏராளமான கரன்சி நோட்டுகள் இருந்தது' என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து, கேரள சட்டசபையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., அன்வர் சதத் கேட்டதற்கு, பினராயி விஜயன் கூறியதாவது:கடந்த, 2016ல் நான் கேரள முதல்வரான பின், ஐந்து தடவை அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றேன்.ஒருமுறை கூட என் சூட்கேசை மறந்து விட்டுச் சென்று, திரும்ப வரவழைத்ததில்லை. என் மீது பொய்யாக குற்றம்
சாட்டப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே தங்க கடத்தல் வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:தங்க கடத்தல் வழக்கில் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலர் சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.
அவர் தந்த வாக்குமூலத்தில், '2016ல் பினராயி விஜயன் துபாயில் இருந்தபோது, இங்கிருந்து ஒரு சூட்கேஸ் அங்கு அனுப்பப்பட்டது. 'நம்பிக்கையான ஒரு நபர் வாயிலாக அந்த சூட்கேஸ் விமானத்தில் எடுத்து செல்லப்பட்டது. அதில் நினைவு பரிசுகள் உள்ளதாக என்னிடம்
கூறப்பட்டது' என, குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
29-ஜூன்-202217:57:07 IST Report Abuse
jayvee மத்திய அரசு இந்த நரியின் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயங்குகிறது.. ஒரு கம்யூனிஸ்ட் அடிமைகளும் இதை பற்றி இன்று வரை வாய் திறக்கவில்லை..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
29-ஜூன்-202206:25:16 IST Report Abuse
Kasimani Baskaran அவர் என்ன தனி விமானத்தையா எடுத்துச்சென்றார்? ஒரே ஒரு பெட்டிதானே... இந்த 'சொப்பன' சுரேஷ் மேடம் ரொம்ப மோசம்...
Rate this:
Cancel
29-ஜூன்-202206:08:00 IST Report Abuse
அப்புசாமி வி.ஐ.பி சூட் கேசுங்களை ஒரு பய சோதனை போட மாட்டான். ஸ்கேன் பண்ண மாட்டாங்க. டில்லி இண்டர்நேஷனல் ஏர் போர்ட்ல வெட்டியா 10 அடிக்கு ஒரு ஆள் நின்னுக்கிட்டு நம்ம ஜேபி வரைக்கும் சோதனை போட்டு, எல்லா சாமானையும் இரைச்சுப் போட்டு நம்மளையே பேக் பண்ணிக்கச் சொல்வாங்க. அப்துல் கலாமையே சோதனை பிட்டவங்ஜ, இந்த மாதிரி கழிசடைகளின் சூட்கேஸ்களை சோதனை போடக் கூடாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X